மலரே என்னிடம் மயங்காதே – 12

(Tamil Kamaveri - Malarae Ennidam Mayangathae 12)

Raja 2014-02-21 Comments

Tamil Kamaveri – அவள் இன்னும் என் கண்களையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவு முழுவதும் அவள் சரியாக தூங்கவில்லை என்பது அவளை பார்த்ததுமே தெளிவாக தெரிந்தது. முகம் வாடிப் போயிருந்தது..!! அழுதுஅழுது சோர்ந்து போன விழிகளும், கலைந்து போன கூந்தலுமாய் பரிதாபமாக காட்சியளித்தாள். இரவு அவள் சாப்பிடவேறு இல்லை அல்லவா..??

1

நானும் அவள் முகத்தை பரிவுடன் பார்த்தேன். ஆனால்.. என்னால் நெடுநேரம் அந்தமாதிரி அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. அப்புறம் பார்வையை தாழ்த்திக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னேன்.

“தே..தேங்க்ஸ் மலர்..!!”

“ம்ம்ம்.. பரவாலத்தான்..!! நீ..நீங்க.. அப்புறம் நல்லா தூங்குனீங்களா..?”

“ம்ம்ம்…”

“ரொ..ரொம்ப வலிக்குதா..??” ஏதோ அவளுக்கே வலிப்பது போல இருந்தது அவளது குரல்.

“இ..இல்ல.. பெயின் கில்லர் போட்டிருக்காங்கல்ல..? வலி தெரியலை..”

“ம்ம்ம்.. அப்பாவும் ஷ்யாமும் டாக்டர் கூப்பிட்டாங்கன்னு.. பாக்க போயிருக்காங்க..”

“ஓ..!!”

“ஷ்யாம் ரொம்ப ஹெல்ப் பண்ணினாரு.. நைட்டு ஃபுல்லா இங்கதான் இருந்தாரு..!!”

“ம்ம்ம்..”

அப்புறம் மலர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். நான் விழிகளை சுழற்றி, அந்த ஹாஸ்பிட்டல் அறையை ஒருமுறை பார்வையிட்டேன். பெரிய அறையின் குறுக்கே தடுப்பு வைத்து, இரண்டு அறையாக மாற்றி வைத்திருந்தார்கள். நான் படுத்திருக்கும் இந்த பெட், ஒரு பிளாஸ்டிக் சேர், மரத்திலான ஒரு பென்ச், ஒரு ட்ரிப்ஸ் ஸ்டாண்ட்.. மொத்தமே அவ்வளவுதான்..!! சேரில்தான் மலர் அமர்ந்திருந்தாள். நேற்று பன்னீர் படுத்திருந்த இடத்தில்.. தரையில்.. இப்போது அபி தூங்கிக் கொண்டிருந்தான்.

நான் நேற்று அணிந்திருந்த சட்டை இப்போது என் உடலில் இல்லை. வெறும் பனியன் மற்றும் லுங்கியில் இருந்தேன். எப்போது நான் லுங்கிக்கு மாறினேன் என்று சரியாக நினைவில்லை. வலது கையை மடக்கி, எலும்பு முறிவுக்கு கட்டுப் போட்டு, கழுத்தில் தொங்க விட்டிருந்தார்கள். தலை எதிலோ சென்று இடித்ததல்லவா..? பேண்டேஜ் போட்டிருந்தார்கள்..!! அப்புறம்.. இடது காலில்.. முழங்காலுக்கு சற்று மேலே ஒரு கட்டு.. அது என்ன எழவுக்காக என்று தெரியவில்லை..!! சின்ன சின்ன சிராய்ப்புகள் அப்படியே விடப்பட்டிருந்தன..!!

நான் அந்த மாதிரி என் உடலின் காயங்களையும், கட்டுக்களையும் ஆராய்ந்து கொண்டிருக்க.. மலர் என்னையே பார்த்துக் கொண்டிருந்திருப்பாள் போலிருக்கிறது..!! எனது கவனத்தை கலைக்கும் விதமாக.. ஒரு மாதிரி பரிதாபமாக, குரல் தழதழக்க கேட்டாள்.

“எ..எல்லாம் என்னாலதான..??”

“எ..என்னது..?” நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.

“நாந்தான அறிவில்லாம அந்த ஸ்வெட்டர்ல கை வச்சு.. நீங்க டென்ஷனா வெளில போய்.. அதனாலதான இப்படி ஆயிடுச்சு..?”

“சேச்சே.. என்ன பேசுற நீ.. அ..அதுலாம் ஒண்ணுல்ல..” நான் அவசரமாய் மறுத்தேன்.

“இல்லத்தான்.. எனக்கு தெரியும்..!! நீங்க காரை ஸ்பீடா கெளப்பிட்டு போறப்போவே.. எனக்கு பக்குன்னு இருந்தது..!! நீங்க பத்திரமா வீட்டுக்கு வரணும்னு.. சாமியை வேண்டிட்டுத்தான் உக்காந்திருந்தேன்..!! ஆனா.. அதுக்கு பதிலா ஷ்யாம்ட்ட இருந்து ஃபோன்தான் வந்தது..!! துடிச்சு போயிட்டேன்த்தான்..!!”

சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிட, வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டாள். அவளுடைய கண்களில் கண்ணீர் திரையிட.. அந்த திரையினூடே என்னை பரிதாபமாக பார்த்தாள். எனக்காக அவள் துடித்திருக்கிறாள் என்ற உணர்வு, என் மனதை பிசைய.. இப்போது நான் அவளுக்காக அப்படியே உருகிப் போனேன்..!!

“ஐயோ.. என்ன மலர் இது..? அழாத ப்ளீஸ்.. நான்தான் அதுலாம் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..? நான் ஏதோ குடிச்சுட்டு போதைல போய் விழுந்துட்டேன்.. அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? மொதல்ல கண்ணைத்தொடை..!! ப்ச்.. கண்ணைத் தொடைச்சுக்கோ மலர்.. ப்ளீஸ்..!!”

நான் அதட்டவும், அவள் விழிகளை துடைத்துக் கொண்டாள். என்னை பார்ப்பதை தவிர்த்து, சற்றே தலையை குனிந்து கொண்டாள். அவ்வப்போது மூக்கை மட்டும் விசும்பிக் கொண்டாள். நான் கொஞ்ச நேரம் அவளையே அமைதியாக பார்த்துவிட்டு.. அப்புறம் மெல்லிய குரலில் சொன்னேன்..!!

2

“ஆக்சுவலா.. தப்பு என் மேலதான் மலர்..!! நீ தெரியாம பண்ணின ஒரு விஷயத்துக்கு.. நான்தான் பெருசா ரியாக்ட் பண்ணிட்டேன்.. தேவையில்லாம உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்..!! என்னை மன்னிச்சுடு..!!” நான் அப்படி உருக்கமாக சொல்ல, இப்போது அவள் பதறினாள்.

“ஐயோ.. என்னத்தான் நீங்க.. எங்கிட்ட போய்.. மன்னிப்பு.. அது இதுன்னுட்டு..!! உங்க மேல என்ன தப்பு.. நான்தான் புத்தி இல்லாம.. அப்படி பண்ணிட்டேன்..!!”

“இல்லம்மா.. நீ வேணும்னே அதை பண்ணலையே.. தெரியாமத்தான..? அதுக்கு நான் அவ்வளவு டென்ஷன் ஆகி.. உன்னை அழ வச்சிருக்க கூடாது..!! அதுக்காக நான் மன்னிப்பு கேக்குறது ஒன்னும் தப்பில்ல..!! ஆனா..” என நான் சற்றே இழுக்க,

“ஆனா..??”அவள் குழப்பமாய் என்னை ஏறிட்டாள்.

“இ..இனி.. கயல் சம்பத்தப்பட்ட விஷயங்கள்ல.. கொஞ்சம் கவனமா இரு மலர்.. எனக்கு கயலோட நினைவுகள் ரொம்ப முக்கியம்..!!”

“ம்ம்ம்.. புரியுதுத்தான்..!! இனிமே சத்தியமா இந்த மாதிரி எதுவும் பண்ணமாட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. சரி அதை விடு.. வேற ஏதாவது பேசலாம்..!! அபி என்ன இன்னும் தூங்குறான்.. அவனுக்கு பசிக்கப் போகுது.. எழுப்பி ஏதாவது கொடு..!!”

“காலைலேயே எழுந்து ஒரு பாட்டில் பால் காலி பண்ணிட்டுத்தான்.. திரும்ப தூங்கிட்டு இருக்காரு..!! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்.. அவனும் நைட்டு ஒழுங்கா தூங்கலை..!!”

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பன்னீரும் ஷ்யாமும் உள்ளே நுழைந்தார்கள். நான் எழுந்து, தெளிவாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் அவர்கள் முகத்தில் ஒரு வித சந்தோஷமும், மகிழ்ச்சியும் பரவியது. டாக்டர் என்ன சொன்னார் என்பதை என்னிடமும், மலரிடமும் பகிர்ந்து கொண்டார்கள். ‘நாளை டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள்.. வாரம் ஒருமுறை செக்கப் வர வேண்டும்.. ஒரு மாதத்தில் கை பூரண குணமடைந்து விடும்..’ என டாக்டர் சொன்னதையும், அவர் தந்த அறிவுரைகளையும் எங்களிடம் தெரிவித்தார்கள்.

அப்புறம் கொஞ்ச நேரம் நான்கு பேரும் அந்த ஹாஸ்பிட்டல் பற்றியும், அவர்களுடைய சேவை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். எட்டு மணி ஆனதும் ஆபீசுக்கு போக வேண்டும் என்று ஷ்யாம் கிளம்பினான். நாங்கள் மூவரும், அவன் செய்த உதவிக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்லிக் கொண்டோம். இன்று வேலைக்கு லீவ் சொல்லிவிடுவதாக சொன்ன பன்னீரை, மலர் விடவில்லை.

“ப்ச்.. அதான் நான் இருக்கேன்ல.. எல்லாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!! நாளைக்குத்தான டிஸ்சார்ஜ்..? நாளைக்கு வேணா லீவு போடு..!!” என்று அவரை கிளப்பி விட்டாள்.

“சரி அசோக்கு.. பாத்துக்கோ.. சாயந்திரம் ஷிப்ட் முடிஞ்சதும்.. நேரா ஆஸ்பத்திருக்கு வந்துர்றேன்..”

சொல்லிவிட்டு பன்னீரும் கிளம்பினார். அவர் போனதும் நானும் மலரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எட்டரை மணி போல அபி கண்விழித்தான். பசியில் அழுதான். மலர் ஃப்ளாஸ்க் திறந்து, அவனுக்கு பால் கலந்து கொடுத்தாள். பால் சாப்பிட்டதும் மலர் அவனை பெட்டில் ஏற்றி விட, சிறிது நேரம் அவனுடன் நான் கொஞ்சி விளையாடினேன். ஒன்பது மணி வாக்கில் டாக்டர் ரவுண்ட்ஸ் வந்தார்.

“ஒன்னும் வொர்ரி பண்ணிக்க தேவை இல்ல.. விதின் ஒன் மன்த், யூ வில் பீ கம்ப்ளீட்லி ஆல்ரைட்..!!” என்று நம்பிக்கையூட்டினார்.

டாக்டர் வந்து சென்றதும், காலை உணவு சாப்பிட்டேன். ப்ரடும், பாலும் தான்..!! ந்யூஸ் பேப்பர் வாசித்தேன்..!! மெல்ல அடியெடுத்து.. வெளியே வராந்தாவுக்கு சென்று டிவி பார்த்தேன்..!! உடல் நலம் விசாரித்து ஆபீசில் இருந்து வந்த ஃபோன் கால்களை அட்டன்ட் செய்தேன்..!! பிறகு கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுத்தேன். தூங்கியவனை மலர் எழுப்பியபோது இரண்டு மணி ஆகியிருந்தது.

“அபியை பாத்துக்கங்கத்தான்.. நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்..” என்றாள்.

“ம்ம்..”

தூக்கக் கலக்கத்துடன் சொன்னவாறே நான் எழுந்து அமர்ந்து கொண்டேன். பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருந்த என் மகனின் தலை முடியை மென்மையாக கோதி விட்டேன். அவன் தலையை திருப்பி என்னை பார்த்து அழகாக புன்னகைத்தான்.

ஹாஸ்பிட்டல் வளாகத்துக்குள்ளேயே ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கிறது. மலர் அங்குதான் சென்று எனக்கும் அவளுக்கும் சாப்பாடு பார்சல் வாங்கிக் கொண்டு வந்தாள். வந்தவள் பார்சலை பிரித்து ப்ளேட்டில் சாதத்தை கொட்டிய போதுதான் எனக்கு அந்த ஞாபகமே வந்தது..!! கழுத்தில் தொங்கும் ஊஞ்சலில் ஆடும்.. வலது கையை வைத்துக்கொண்டு.. எப்படி நான் சாதம் அள்ளி சாப்பிடுவது..??? தயக்கத்துடனே மலரிடம் கேட்டேன்.

“ஸ்..ஸ்பூன் இல்லையா மலர்..?”

“இல்லைத்தான்.. அப்பாட்ட காலைல எடுத்துட்டு வர சொல்ல மறந்துட்டேன்..!!”

Comments

Scroll To Top