நெஞ்சோடு கலந்திடு – 31

(Tamil Kamakathaikal - Nenjodu Kalanthidu 31)

Raja 2014-02-01 Comments

இப்போது சித்ரா அழுகையை நிறுத்தினாள். இரண்டு கையாளும் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டாள். மூக்கை லேசாக விசும்பிக் கொண்டாள். புதிதாய் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் சொன்னாள்.

“இரு.. ஒரு நிமிஷம் இங்கயே இரு..!! உனக்கு நான் ஒன்னு காட்டனும்.. அசோக் உன்னை எந்த அளவு நேசிக்கிறான்னு உனக்கு காட்டனும்..!! ஓடிடாத.. அண்ணி இதோ வந்துடுறேன்..!!”

சொன்ன சித்ரா அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள். திவ்யாவுக்கு ஏனோ இப்போது எழுந்து ஓடவேண்டும் என்று தோன்றவில்லை. சித்ரா இன்னும் என்ன சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. ‘அசோக் எந்த அளவுக்கு என்னை நேசிக்கிறான்..?’ தெரிந்து கொள்ள அவளுடைய உள்மனம் ஆர்வமாக இருந்தது.

அரை நிமிடம் கூட ஆகியிருக்காது. சித்ரா மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய கையில் இப்போது புதிதாக ஒரு பை முளைத்திருந்தது. அந்தப் பையை திவ்யா அமர்ந்திருந்த கட்டிலுக்கு மேலாக உயர்த்தி பிடித்து, தலை குப்புற கவிழ்த்தாள். பொலபொலவென ஏதேதோ பொருட்கள், அந்தப் பைக்குள் இருந்து விழுந்து, மெத்தையில் விழுந்து ஓடின..!! ‘என்ன இதெல்லாம்..?’ என்பது போல திவ்யா அவற்றை பார்த்தாள்.

பார்க்க பார்க்க.. அவளுடைய உடம்பின் அனைத்து செல்களிலும் ஒரு பரவசமான உணர்ச்சி உடைப்பெடுத்து ஓட ஆரம்பித்தது..!! வார்த்தைகளில் சொல்ல முடியாத மாதிரியான.. ஒரு புதுவிதமான.. அதுவரை அவள் அனுபவித்திராத அற்புதமான உணர்ச்சி..!! வீணையின் தந்திகளை விரல்களால் மீட்டுவது போல.. அவள் உடலின் நாடி நரம்புகள் அத்தனையையும் மீட்டிப் பார்த்தது அந்த வினோதமான உணர்ச்சி..!!

மெத்தையில் சிந்திக் கிடந்தது எல்லாம், சிறுவயதிலிருந்தே திவ்யாவின் ஞாபகார்த்தமாக அசோக் சேர்த்து வைத்திருந்த பொருட்கள்..!! சில உடைந்த வளையல் துண்டுகள்.. ஒரு நெளிந்து போன நட்ராஜ் ஜியாமட்ரி பாக்ஸ்.. குப்பையில் வீசிஎறிந்த இயர்ஃபோன்.. குற்றாலத்தில் தவறவிட்ட காதணி.. மறந்து போயிருந்த இதயவடிவ கீ செயின்.. தொலைந்துபோனது என எண்ணியிருந்த பூனை படம் போட்ட கர்ச்சீஃப்.. எப்போதோ அசோக்கிற்கு பரிசளித்த பேனா.. எதற்காக எடுத்து வைத்திருக்கிறான் என்றே தெரியாத கடல் கிளிஞ்சல்கள்..!!

இன்னும் ஏதேதோ பொருட்கள்.. கலர் கலராய்.. சிறிதும் பெரிதுமாய்.. புதிதும், பழையதுமாய்..!! எல்லாப் பொருட்களுக்கும் மையமாய் அந்த டைரி திறந்த வாக்கில் விழுந்திருந்தது..!! ஃபேன் காற்றில் டைரியின் காகிதங்கள் படபடத்தன..!! அதனுள்ளே செருகி வைத்திருந்த காதல் சொல்லும் கார்டுகள், இப்போது வெளிய வந்து கட்டில் முழுதும் சிதறி கிடந்தன..!! டைரியின் சில பக்கங்களில் தென்பட்ட திவ்யாவின் கோட்டு சித்திரங்கள்..!! ஒரு சித்திரத்தின் நெற்றியில் அவளுடைய ஸ்டிக்கர் போட்டு..!! எல்லா பக்கங்களிலும் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த எக்கச்சக்கமான ‘I LOVE YOU DIVYA ..!!’க்கள்..!! Koothi Tamil Kamakathaikal

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top