நெஞ்சோடு கலந்திடு – 31

(Tamil Kamakathaikal - Nenjodu Kalanthidu 31)

Raja 2014-02-01 Comments

Tamil Kamakathaikal – நியூட்டனின் மூன்றாம் விதி மிக பிரபலம்..!! இயற்பியல் பயிலாதவர்கள் கூட, அந்த விதியை மிக இயல்பாக மேற்கோள் காட்டி பேசுவது, நாம் அடிக்கடி காணக்கூடிய ஒன்றுதான்..!! நான் இங்கு சொல்லப் போவது வேறு.. எனக்கு நியூட்டனின் முதல் விதியை மிகவும் பிடிக்கும்..!! உங்களில் எத்தனை பேர் அவருடைய முதல் விதியை படித்திருக்கிறீர்கள்..? படித்தவர்களில் எத்தனை பேருக்கு அது இப்போது ஞாபகம் இருக்கிறது..??

என்னடா இவன்.. கதை படிக்க வந்தால் கத்தியை போடுகிறான் என்று எண்ணாதீர்கள்.. காரணம் இருக்கிறது..!! சரி. அந்த முதல் விதியை நான் என்னுடைய சொந்த வரிகளில் சற்று எளிமையாக சொல்கிறேன்..!!

‘வெளிப்புற அழுத்தம் எதுவும் இல்லாமல், எந்தப் பொருளும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாது..!!’

இது ஒரு இயற்பியல் விதி..!! ஆனால்.. மனிதர்களுக்கும், அவர்களுடைய மனங்களுக்கும் இந்த விதி மிகவும் பொருந்தும்..!! புத்தியில் வலுவாக ஒரு அடி விழாத வரை எந்த மனிதனின் அடிப்படை குணமும் மாறாது..!! நல்லவனோ, கெட்டவனோ.. திருடனோ, தீவிரவாதியோ.. அரசியல்வாதியோ, ஆன்மீகவாதியோ.. அவர்களுடைய அடிப்படை குணம் மாற வேண்டும் என்றால்.. அவர்களுடைய மூளையை பலமாக ஏதோ ஒன்று பாதித்திருக்க வேண்டும்..!!

சித்ராவின் மனமாற்றத்திற்கும் அதுதான் காரணம். நேற்று அவள் புத்தியில் வலுவான ஒரு அடி விழுந்தது. தம்பியின் காதல் தோற்றுப் போனால், அவனை அவள் இழக்க நேரிடுமோ என்ற பயம்தான் அந்த வலுவான அடி..!! அதனால்தான் தனது பதினைந்து வருட பிடிவாதத்தை தூக்கி எறிந்து விட்டு, அவளுடைய அடிப்படை குணத்தை மாற்றிக்கொண்டு, இன்று திவ்யாவின் அறை வாசல் வந்து நிற்கிறாள்..!!

“எ..எனக்கு.. உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் திவ்யா..!!”

ஆனால், திவ்யா அதை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. இறுதி வரை இவள் தன்னுடன் பேசவே மாட்டாள் என்ற எண்ணம்தான் அவள் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது. இப்போது அவள் தன் அறை வாசலிலேயே வந்து நின்று, பேசவேண்டும் என்றதும் அதிர்ந்து போனாள். திகைத்தாள்.. திணறினாள்.. தடுமாறினாள்..!!

சித்ரா இப்போது திவ்யாவின் அறைக்குள் நுழைய, திவ்யாவை ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. தன் கண்களையே கூர்மையாக பார்க்கும் சித்ராவின் பார்வையை, ஏனோ திவ்யாவால் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. அவள் இந்த மாதிரி ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் அகப்பட்டுக்கொண்டதே இல்லை. அவளுடைய உடல் நடுக்கம் எடுக்க, அந்த சூழ்நிலை இப்போது அவளுக்கு அசௌகர்யமாக பட்டது.

திவ்யாவுக்கு அங்கே நிற்பது பிடிக்கவில்லை. அந்த சூழ்நிலையை தவிர்த்துவிட வேண்டும் என்று எண்ணினாள். அவசரமாக அறை வாசலை நோக்கி ஓடினாள். திவ்யாவின் எண்ணம் சித்ராவுக்கு உடனே புரிந்து போனது. அவளும் வேகமாக குறுக்கே நகர்ந்து, ‘நில்லுடி…!!’ என்று கோபமாக கத்தியவாறு, திவ்யாவின் இடது கையை எட்டிப் பிடித்தாள். இழுத்து அவளை மீண்டும் அறைக்குள்ளேயே தள்ளினாள்.

உள்ளே தள்ளப்பட்ட திவ்யா தடுமாறிப் போனாள். கால்கள் இடற, மெத்தையிலே சென்று பொத்தென்று அமர்ந்தாள். அமர்ந்தவள், சித்ராவின் முகத்தை ஏறிட்டு பார்க்க விரும்பாமல், அப்படியே தலையை குனிந்து கொண்டாள். அவளுடைய நுரையீரல் இப்போது அதிவேகமாய் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளிவிட, திவ்யாவுக்கு ‘புஸ்.. புஸ்..’ என்று மூச்சிரைத்தது. அவளுடைய மார்புப்பந்துகள் ரெண்டும் ‘குபுக்.. குபுக்..’ என விரிந்து விரிந்து சுருங்கி கொண்டிருந்தன. சித்ரா இப்போது சற்றே ஆவேசமாக பேச ஆரம்பித்தாள்.

“போதும் திவ்யா.. என்னை பாத்து.. நீ மெரண்டு மெரண்டு ஓடுனது போதும்..!! நான் எதிரே வந்தா மூஞ்சியை அந்தப்பக்கம் திருப்பிக்கிறதும்.. க்ராஸ் பண்றப்போ தலையை குனிஞ்சிக்கிறதும்.. ரூம் விட்டு வெளில வர்றப்போ நான் வெளில நிக்கிறனான்னு எட்டிப் பாத்துட்டு வர்றதும்.. போதும்.. எல்லாம் போதும்..!! என்னை பாத்தா ராட்சசி மாதிரி தெரியுதா உனக்கு..? பேசுனா கடிச்சா வச்சிடுவேன்..? உன் அண்ணிதான..? அண்ணன் பொண்டாட்டிதான..? பேசு என்கூட..!!”

திவ்யா எதுவும் பேசவில்லை. ‘புஸ்.. புஸ்..’ என்று மூச்சிரைத்தவாறு, தனது பெரிய விழிகளை அகலமாய் திறந்து, தரையையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள். சில வினாடிகள் காத்திருந்துவிட்டு, பின் சித்ராவே தொடர்ந்தாள்.

“பேசு திவ்யா.. இன்னைக்கு நீ பேசித்தான் ஆகணும்.. இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!! என் தம்பியை நெனச்சா எனக்கு பயமா இருக்கு..!! உன் மேல இருக்குற பிரியத்துல.. உன்கூட பேசாம இருக்குற ஏக்கத்துல.. அவன் ஏடாகூடமா ஏதாவது செஞ்சுக்குவானோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு..!! நேத்து அவன் இருந்த நிலைமையை நீ பாத்திருந்தா.. உனக்கு புரிஞ்சிருக்கும்.. அவனை அந்த கோலத்துல பாத்த எனக்கு நெஞ்சே வெடிச்சு போச்சு திவ்யா..!! ஏன் இப்படி செஞ்ச.. ஏன் அவனை இந்த நெலமைக்கு ஆளாக்கி வச்சிருக்குற..??”

சித்ரா கத்த, இப்போது திவ்யா தனது தலையை சரக்கென திருப்பி, தன் அண்ணியை கூர்மையாக ஒரு உக்கிரப்பார்வை பார்த்தாள். ‘நான் என்ன பண்ணுனேன் உன் தம்பியை..?’ என்பது மாதிரி இருந்தது அந்தப்பார்வை..!! ஓரிரு வினாடிகள்தான் அப்படி பார்த்திருப்பாள். உடனே மீண்டும் தலையை கவிழ்த்துக் கொண்டாள். ஆனால் அதற்கே சித்ரா சற்று மிரண்டு போனாள். பட்டென தன் குரலில் ஒரு மென்மையை குழைத்துக்கொண்டு பேசினாள்.

“இங்க பாரு திவ்யா.. நான் உன்னை குறை சொல்றேன்னு நெனைக்காத..!! நீ அவசரப்பட்டு நெறைய முடிவு எடுக்குற.. அது உனக்கு நல்லது இல்லம்மா..!! அசோக்கை பத்தி நான் சொல்லி.. நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்ல.. உனக்கே அவனைப் பத்தி நல்லா தெரியும்..!! உன்மேல அவனுக்கு எவ்வளவு பாசம் தெரியுமா.. உன்னை திட்டுறேன்னு எத்தனை தடவை என்கிட்டே சண்டைக்கு வந்திருக்கான் தெரியுமா..? அவன் எவ்வளவு நல்லவன்.. எப்படி கள்ளம் கபடம் இல்லாம சிரிச்சுட்டு திரிவான்.. அவனுக்கு புடிக்காத ஆளுங்ககிட்ட கூட.. அவங்க மனசு நோகாம நடந்துக்குவான்தான..?? எதிரிக்கு கூட கெடுதல் நெனைக்க மாட்டான் என் தம்பி.. அவன் உயிருக்கு உயிரா காதலிக்கிற உனக்கா கெடுதல் நெனைப்பான்..?? கொஞ்சம் யோசிச்சு பாரும்மா..!!”

திவ்யா அமைதியாக தரையை பார்த்து அமர்ந்திருந்தாலும், அவளது மூளை அவளையுமறியாமல் சித்ரா சொன்ன விஷயங்களை அசை போட்டு பார்த்தது. ‘சித்ரா சொல்வதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அசோக் நல்லவன்தான்.. யாரையும் நோகடிக்காத நல்ல மனசுக்காரன்தான்.. ஆனால்.. ஆனால்.. அதற்காக அவன் என் காதலை அழிக்க நினைத்தது எந்த விதத்தில் சரியாகும்..??’ திவ்யா யோசிக்க, அதற்குள் அவளது மனதை படித்தவளாய் சித்ரா சொன்னாள்.

“தயவு செஞ்சு.. அசோக் உன் காதலை கெடுக்க நெனச்சவன்னு மட்டும் சொல்லிடாத..!! ஆரம்பத்துல.. உன் மேல இருந்த காதலால.. மனசு தடுமாறி அவன் ஒருதடவை அந்த மாதிரி செஞ்சது என்னவோ உண்மைதான்..!! ஆனா.. அப்புறம்.. திவாகர் திரும்ப வந்தப்புறம்.. அவனோட காதலை எல்லாம் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டு.. உன் காதலுக்கு எவ்வளவு உதவி செஞ்சான்னு நெனைச்சு பாரு.. உனக்கு எவ்வளவு யோசனை சொன்னான்னு கொஞ்சம் யோசிச்சு பாரு.. அந்த திவாகருக்கு புடிக்கிற மாதிரி உன்னை மாத்தினது.. அவன்கிட்ட எப்படி பேசணும்.. எப்படி பழகனும்னு உனக்கு டிப்ஸ் கொடுத்தது.. எல்லாம் யோசிச்சு பாரு..!! திவாகரோட குடிப்பழக்கம் உனக்கு தெரிஞ்சப்போ.. அவரோட காதலை முறிச்சுக்க நீ ரெடியானப்போ.. அவசரப்படாத திவ்யான்னு உன்னை தடுத்தது யாரு..? உன் காதலை கெடுக்கனும்னா.. அசோக் ஏன் இதெல்லாம் செய்யணும்..? அவனுக்கு உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்றதை தவிர வேற எந்த நோக்கமும் இல்ல திவ்யா.. தயவு செஞ்சு இதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!”

திவ்யாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய மூளை இப்போது சற்றே குழம்பியது. ‘ஆமாம்.. எல்லாம் சரியாகத்தான் செய்தான்.. நானும் அப்படித்தான் நம்பினேன்.. அப்புறம் ஏன் அன்று வந்து திடீரென அப்படி சொன்னானாம்..? திவாகரை மறந்துவிடு என்று..!! ஏதோ நண்பர் மூலம் விசாரித்தேன் என்று கதையெல்லாம் அளந்தானே..? ஏன் அப்படி பொய் சொல்லி என் காதலை பிரிக்க நினைக்கவேண்டும்..?’ திவ்யாவின் மூளை குழம்பிக்கொண்டிருக்க, சித்ரா தொடர்ந்தாள்.

“உனக்கு அந்த திவாகரைப் பத்தி சரியா தெரியலை திவ்யா.. அந்த ஆள் சரி கிடையாது.. ரொம்ப மோசமான கேரக்டர்..!! ‘திவ்யாவை உன்கிட்ட இருந்து பிரிச்சு காட்டுறேன்’னு அசோக்கிட்டயே வந்து சவால் விட்டு பேசிருக்கான்.. தன்னோட மோசமான குணங்களை பத்தி சொல்லி.. ‘முடிஞ்சா திவ்யாகிட்ட இதெல்லாம் சொல்லிப்பாரு.. அவளை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும்’னு திமிரா பேசிருக்கான்..!! திவாகர் மேல இருந்த கோவத்துலதான்.. அசோக் அன்னைக்கு ‘திவாகரை மறந்துடு’ன்னு உன்கிட்ட சொன்னது..!! அசோக் சொன்னவிதம் வேணா.. அவசரப்பட்டு, அறிவில்லாம சொன்னதா இருக்கலாம்..!! ஆனா.. அதுக்கும் அவன் உன் மேல வச்சிருந்த அக்கறைதான் காரணம் திவ்யா..!! இந்த மாதிரி ஒரு ஆள்கிட்ட நீ சிக்கிட கூடாதுன்ற அக்கறைதான்..!!”

Comments

Scroll To Top