இதயப் பூவும் இளமை வண்டும் – 63

(idhayapoovum ilamaivandum)

Raja 2015-04-04 Comments

This story is part of a series:

”என்னை நீ இன்சல்ட் பண்ற.. இருதயா.” என லேசான புன்சிரிப்புடன் சொன்னான் சசி.

”ஹைய்யோ.. அப்படி இல்ல..! தப்பா நெனைச்சுக்காதிங்க.. எனக்கு மனசு கேக்காது..! அப்படியே இன்னொரு ஹெல்ப்..” என்றாள்.

”சரி.. வேற என்ன பண்ணனும்…?”

Story : Mukilan

”ஸாரி.. இதே நெம்பருக்கு மெசேஸ் டாப்அப் பண்ணி விட்றுங்க.. ப்ளீஸ்..”

”அவ்ளோதான..?”

”ம்..ம்ம்..!!” சிரித்தாள்

பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்தான்.
”எனக்கு இப்ப.. நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்..”

”ஷ்யூர்.. சொல்லுங்க..”

”நீ நம்ம பிரெண்ட்ஷிப்ப மதிக்கறதான..?”

”நிச்சயமா… ஏன்..?”

”அப்ப புடி.. பணத்தை..! இதை நீ வாங்கலேன்னா.. நம்ம பிரெண்ட்ஷிப்பை நீ மதிக்கலேனு அர்த்தம்..”

பணத்தை அவள் வாங்க மறுத்தாள்.
”சே.. என்ன.. நீங்க….”

”அப்றம் இன்னொரு விஷயம்..”

”என்ன..?”

” நீ நம்ம.. பிரெண்ட்ஷிப்ப மதிக்கலேன்னா..என்னை லவ் பண்றேனு அர்த்தம்..! ஸோ.. இப்ப நீதான் முடிவு பண்ணனும்.. பிரெண்ட்ஷிப்பா.. லவ்வானு…” என சசி சிரித்துக் கொண்டே சொல்ல…

அவளும் புன்னகையுடன் பணத்தை வாங்கிக்கொண்டாள்.
”தேங்க்ஸ்…”

”வெல்கம்..!!” என கண்சிமிட்டிவிட்டுக் கீழே இறங்கினான் சசி.

காம்பௌண்டை விட்டு வெளியே போக.. ராமு கடைமுன்பாக நின்றிருந்தான்.
அவனிடம் போய் மெல்லக் கேட்டான் சசி.
”என்னாச்சு..?”

”அவள காணம்டா..” என்றான் ராமு.

”நெனச்சேன்..” சிரித்தான் ”பிரகாஷ் இருக்கானா..?”

”அவனும் இல்ல.. அவங்கம்மா மட்டும்தான் இருந்துச்சு..! பிரகாஷ் எங்க போனானு கேட்டுட்டு வந்துட்டேன்..!”

” அப்ப.. போலாமா..?”

” ம்.. ம்ம்..!”
இருவரும் கிளம்ப…

மாடியில் இருந்து ”மாமா.. டாடா..” எனக் குரல் கேட்டது.
இருவரும் மேலே பார்க்க.. கையில் குழந்தையுடன் நின்றிருந்தாள் இருதயா.

சசி குழந்தை மதுவுக்கு டாடா காட்ட.. இருதயாவும் அவனுக்கு டாடா காட்டினாள்.

தள்ளிப்போனதும் ராமு கேட்டான்.
”டாடாவெல்லாம் காட்டுது போலருக்கு..?”

”கொழந்தைய வெச்சிருக்கில்ல..”

”ஆனா.. சிரிப்பும்.. பார்வையும் வேற மாதிரி இருக்கே..?”

”அதெல்லாம் இல்லடா.. போனுக்கு ஈஸி பண்ணச் சொன்னா.. அதுக்கு சிரிக்குது..”

”யாருக்கு ஈஸி..?”

”அதுக்குத்தான்..”

”அதோட நெம்பரா..?”

”ம்..ம்ம்..!”

” போன்லாம் வெசசிருக்கா..?”

”அவங்க மாமா வாங்கி குடுத்தாருனு சொல்லுச்சு..”

”ஓகே. . ஓகே..!!’ என்று சிரித்தான்.

”ஏய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா…” என்று சொன்னாலும்.. அவன் மனதின் ஒரு ஓரத்தில்.. உதட்டில் தவழும் குறுஞ்சிரிப்புடன் டாடா காட்டினாள் இருதயா..!!

தியேட்டரில் ஓரளவு கூட்டம் இருந்தது. டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே போய் உட்கார்ந்ததுமே.. சசி மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்தது.
எடுத்துப் பார்த்தான்.
இருதயா நெம்பர்.
”தேங்க் யூ..” என்று அனுப்பியிருந்தாள்.

சசியின் மனதில் மெலிதான பரவசம் உருவானது.
படம் சுமார்தான்..! பாடல்கள் ஏதோ பரவாயில்லை.. எனத் தோண்றியது.
இடையிடையே போன் வந்ததால் ராமு இரண்டு முறை எழுந்து வெளியே போனான்.

இடைவெளையில்.. பாத்ரூம் போய் வந்து.. கேண்டீன் பக்கம் போனபோதுதான்.. அவள்களைப் பார்த்தான் சசி.!

கவிதாயினி.. புவியாழினி.. தங்கமணி.. மூன்று பேரும் சினிமாவுக்கு வந்திருந்தார்கள்.
கவி.. அவளது தோழிகளுடன் போவதாகச் சொன்னாளே..? ஆனால் இங்கே இவர்கள் மூவர் மட்டும்தான் இருந்தனர்.!

சசியைப் பார்த்ததும் ”ஹாய்.. டா.. மாமு..!” என்று அவன் பக்கத்தில் வந்தாள் கவி.

”ஏய்.. எப்ப வந்தீங்க..?”

”படம் ஆரம்பிக்கறப்பவே வந்துட்டம்டா..” என்று சிரித்தாள்.

”நீ உன் பிரெண்டுகளோட போறேனு சொன்ன..?”

”ஆமாடா.. வந்துருக்காளுக.. மீட் பண்றயா..?” என்று கேட்டாள்.

”எங்க.?” என புவியைப் பார்த்தான் அவள் அவனைப் பார்த்து முகத்தைத் திருப்பினாள்.
தங்கமணி புன்னகைத்தாள்.

”உள்ள உக்காந்துருக்காளுக.. வா..” அவன் கையப் பிடித்தாள்

”இல்ல.. பரவால்ல விடு.. இப்ப நா அந்த மூடுல இல்ல.! என்ன வாங்கற.. ஏதாவது வேனுமா..?”

”இல்லடா.. வாங்கிட்டோம்..!”
அவளோடு மட்டும் சிறிது நேரம் பேசிவிட்டு உள்ளே போனார்கள்.

உட்கார்ந்ததும் ராமு கேட்டான்.
”என்னடா.. புவி கூடல்லாம் பேசறதில்லையா.?”

”இல்லடா.. கொஞ்சம் மனஸ்தாபம்..”

”என்னாசசு..?”

” ஒரு சின்ன பிரச்சினை.. அதுலருந்து சரியா பேசறதில்ல..!”என்றான்.

மீண்டும் படம் துவங்க.. அதோடு பேச்சு நின்றது.
அதன் பிறகு சசிக்கு சினிமாவில் மனசு சுத்தமாகவே ஒட்டவில்லை. அவன் மனசு மிகவுமே கணத்துப் போனது.!

படம் முடிந்து வெளியேறியதும் சசி கேட்டான்.
”தண்ணியடிக்கலாமாடா..?”

” ம்..ம்ம்..! நானே நெனச்சன்டா..!” என்றான் ராமு.

”பார்லயே உக்காந்துக்கலாமா.?”

”வேனான்டா.. வாங்கிட்டு போயிடலாம்..! புள்ளைங்கள பாக்கலயா..?”

”அவளுகள்ளாம் போயிருவாளுக.. விடு..!!” என்றான் சசி.

ராமு பெண்களைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.
”அங்க இருக்காங்கடா..”

சசி பெண்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.!!

ஆறு நிறையத் தண்ணீர் ஓடியது. பவானி ஆற்றின் அழகை ரசித்தவாறு.. அமைதியாக உட்கார்ந்து பீர் குடித்தார்கள்.
விடுமுறை நாள் என்பதால்.. இன்னும் சில இளைஞர்களின் பார்ட்டியும் நடந்து கொண்டிருந்தது.!

பீர் போதை சசியின் மனதை இலகுவாக்கியது. அவன் மனதில் இருந்த பாரம் எல்லாம் கரைந்துவிட்டது போலிருந்தது.

” அப்றம் அண்ணாச்சியம்மா மேட்டர்லாம் எப்படி போகுது.?” என்று கேட்டான் ராமு.

”ம்..அப்படியே போகுதுடா..”

”வண்டிய நல்லா ஓட்றயா..?”

”ம்.. நல்லாத்தான்டா ஓடுது..? சரி.. மஞ்சுவ எப்படி விட்ட..?”

”அவள்ளாம் ஒரு மேட்டர்டா.. அவள நாம விடனுமா என்ன.? அவளே நம்மள கழட்டி விட்றுவா..! அப்படித்தான்..! ஆனா இப்ப பிரச்சினை இல்லை..! வேனும்னு கூப்ட்டா வந்துருவா..” என்று சிரித்தான்.

”சரி.. அவ ஏன்டா இப்படி ஆகிட்டா..?”

”அதெல்லாம் நாம எப்படிடா சொல்றது.? நமக்கு என்ன.. கிடைச்சா என்ஜாய் பண்ண வேண்டியதுதான்.”

மாலைவரை ஆற்றில்தான் இருந்தார்கள். பலதும் பேசினார்கள்.
ஆனால் புவியைக்காதலித்தது பற்றி மட்டும் சசி.. ராமுவிடம் சொல்லவே இல்லை..!!

இந்த ஆறுமாதகாலத்தில் சசியிடம் ஏற்பட்டிருந்த மாற்றங்களில் ஒன்று.. இரவில் அவன் தூஙகுவது.!
இப்போது அவன் வீட்டில் தூங்கவது இல்லை. குமுதா வீட்டில்தான் தங்கிக்கொண்டிருந்தான்.
அதற்கு முக்கிய காரணம்.. புவி அவனைப் பார்க்க விரும்பாதது.! அதனால் அவன்.. அவளை நினைத்து.. இரவின் தூக்கம் தொலைக்க வேண்டியிருந்தது.!

குமுதா வீட்டில் தூங்குவதால் அவன் பெரும்பாலும்.. வீட்டு மொட்டை மாடியில்தான் தூங்குவான். அதில் இன்னொரு நன்மையும் இருந்தது.
இரவில்.. அதிக நாட்களில்.. அண்ணாச்சியம்மா.. அவனைத் தேடி மொட்டை மாடிக்கே வந்துவிடுவாள்.!!

ஆற்றில் இருந்து சசி வீடு திரும்பியபோது.. அவனுக்கு லேசாக தலை பாரமாக இருந்தது. கண்களில் கூட ஒருவித எரிச்சல் இருந்தது.
குமுதா வீட்டுக்குப் போனவன் அப்படியே படுத்து தூங்கிவிட்டான்.
அவன் தூங்கி எழுந்தபோது.. அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. உலகம் இருளுக்குள் அமிழ்ந்து போயிருந்தது.!

மணி எட்டு இருபது..!!

குமுதா கேட்டாள்.
”என்னடா.. ஒடம்பு பரவால்லையா..?”
இப்போது தலைபாரம் சுத்தமாக இல்லை. ஆனால் உற்சாகமின்றி மிகவும் மந்தமாக இருப்பது போலிருந்தது.!

”ம்..ம்ம்.! ஒரு காபி போட்டு தாயேன்.!” என எழுந்து பாத்ரூம் போய் வந்தான்.
கிச்சனில் இருந்த குமுதாவிடம் போய் கேட்டான்.
”மச்சான்.. பசங்கள்ளாம் எங்க..?”

”கீழ இருப்பாங்க..! மத்யாணம் சாப்பிட்டியாடா..?”

”ம்..ம்ம். .!!”

”என்ன சாப்பிட்டே..?”

”ஏன். .?”

”நீ வீட்டுக்கும் போகல..”

”அம்மா போன் பண்ணுச்சா..?”

”ம்..ம்ம்..!” சிரித்தாள் ”தண்ணியடிச்சிட்டு சாப்பிடவே இல்லையா..?”

சிரித்து அவள் தலையில் தட்டினான்.
”தண்ணி இல்ல.. பீர்…”

”சரி.. பீர் குடிச்சா.. பசிக்காத…?”

”ஏய்.. அதவிடு..! காபி குடு மொதல்ல…”

காபி கலந்து கொடுத்தாள்..!!

சசி காபி குடித்துவிட்டு மொட்டை மாடிக்குப் போய்.. அண்ணாச்சியம்மாவுக்கு போன் செய்தான்.!
எடுத்தவள்..
”ஏன்டா.. இப்பதான் நெனப்பு வந்துச்சா..?” என்று கேட்டாள்.

”ஸாரி.. தூங்கிட்டேன்..! என்ன பண்றீங்க..?”

” டிவி முன்னால உக்காந்துருக்கேன்..! செம்ம போர்..”

”அண்ணாச்சி..?”

”எங்கயோ போயிருக்காரு..! நீ எங்க இருக்க இப்ப..?”

”மேல….”

” வரியா இப்ப..! வாடா.. பையா..! எனக்கு ரொம்ப பீலிங்கா இருக்கு…!”என்று கொஞ்சினாள்.

”இப்ப வெண்டாம்.. நைட் வரேன்..!!” என்றான் சசி….!!!!

– வளரும்….!!!!

What did you think of this story??

Comments

Scroll To Top