சினிக்கூத்து – 1

(Tamil Kama Stories - Cinekoothu 1)

karthik-fire 2014-04-06 Comments

Tamil Kama Stories – திரைஉலகில் சூர்யா

இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் நானும் ஒருவன். சூப்பர் ஸ்டார்கள் முதல் புதுமுகம் வரை என் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கின்றனர். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் ஒரு ரேஸ் குதிரை. என் பெயர் ஆர்.ஜே.சூர்யா. அப்பன் ஆத்தா வைச்ச பெயர் சூர்யநாராயணன். சினிமாவுக்காக ஆர்.ஜே. சூர்யா. பத்து வருடமாக சினிமாவில் இருக்கின்றேன். இதில் முதல் ஐந்து வருடங்கள் உதவி இயக்குனராகவும் இறுதி ஐந்து வருடம் இயக்குனராகவும் இருக்கின்றேன். உதவி இயக்குனராக வாழ்ந்த காலங்களில் நான் பட்ட அவமானங்கள் பல. அதனாலோ என்னவோ எனது உதவியளர்களிடம் எனக்கு தனி அன்பு. அவர்களிடம் எனக்கு தனி மரியாதை.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : karthik-fire

1

என்னிடம் பத்து உதவியாளர்கள். ஐந்து பேர் சீனியர்ஸ். ஐந்து பேர் ஜூனியர்ஸ். சீனியர்ஸின் வேலை படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு உதவியாக இருப்பது. சில காட்சிகளை அவர்களே இயக்கவும் செய்வார்கள். மற்றைய ஐவர் கதாசிரியருடன் இணைந்து கதையையும் என்னுடன் இணைந்து திரைக்கதையையும் வசனகர்த்தாவுடன் இணைந்து வசனத்தையும் செதுக்குவது. இந்த செக்சனில் போதிய பயிற்சியின் பின்னரே அவர்கள் படப்பிடிப்புதளத்தில் அனுமதிக்கப்படுவார்கள். சிறந்த திரைக்கதையே ஒரு படத்தின் வெற்றிக்கு ஆணிவேர். அதுவே என் வெற்றியின் இரகசியமும் கூட.

இயக்குனராக எனது சினிமாவாழ்க்கை வெற்றிகரமாக இருக்கின்றது. ஆனால் அதற்கு முந்திய சினிமா அனுபவங்கள்………….! அப்போது பட்ட காயங்கள், வலிகள், அவமானங்கள் என்னை வழிநடத்தி வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றது என்பதுதான் உண்மை. நான் மட்டுமல்ல புதுமுக நாயகன்; ஒட்டுமொத்த நாயகி, உதவி டான்ஸ்சர்கள் என ஒவ்வொருவரும் கசப்பான அனுபவங்களை சந்தித்தே ஆகவேண்டும். அப்படியான சினிமாவின் கசப்பான உண்மைகளை உங்களுடன் என் அனுபவங்கள் மூலம் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கின்றேன்.

என் சொந்த ஊர் சென்னைதான். சின்ன வயசில் இருந்தே சினிமாப் பைத்தியம். படிப்பு ஏறவில்லை. வீட்டில் படிப்புக்குத் தனிமரியாதை. எனக்கு நல்ல விதமாகச் சொல்லிப்பார்த்தார்கள். நான் கேட்கும் நிலைமையில் இல்லை. இது தேறாது என நினைத்த அப்பா என்னை ஒரு இயக்குனரிடம் உதவியாளனாகச் சேர்த்துவிட்டார். அப்போது என் வயது இருபதுதாங்க. உதவியாளன் என்றால் இயக்கம் சம்பந்தமாக இருக்கும் என்ற நினைப்பில் முதல்நாள் படப்பிடிப்புத்தளத்துக்குப் போனேன்.

சூட்டிங் முடியும் நேரமாகியது. என்னை ஓருவரும் கண்டுக்கவே இல்லை. என்னடா இது வரசொல்லிட்டு இந்த டைரக்டர் கண்டுக்கவே மாட்டேன் என்கின்றார் என்ற சிந்தனையுடன் ஓரமாக இருந்த என்னை டைரக்டர் அழைத்தார். ஏம்பா! உன்னை வரச்சொல்லிட்டு நான் என்பாட்டில இருந்தேனே! உனக்கு கோபம் வரலையா? என்றார் இயக்குனர். இல்லைசார் என்ற என் பதிலைக்கேட்டதும் சின்னச்சிரிப்புடன் ஒரு இயக்குனருக்கு முதல்தேவை பொறுமை. அது உன்னிடம் இருக்கு. இன்னைக்கு இரவு ரயிலில் ஊட்டிக்குப் போகனும். கரெக்டா எட்டுபணிக்கு என் வீட்டுக்கு வந்துவிடு என்றார். நானும் சரியாக எட்டு மணிக்கு அவர் வீட்டுக்குப் போனேன்.

டைரக்டர் முகத்தில் ஒருவிதமான படபடப்பு இருந்தது. காரணத்தைக்கேட்கப் பயமாக இருந்தது. அவரே சொன்னார்.
“பாரு நாராயணா! இந்தப்பயலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதே நான். அவன் படங்கள் சரியாகப் போகாது அடிமேல் அடிவாங்கி ஃபீல்டைவிட்டு போற நிலமையில் இருந்தப்போ அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுகளைக் குடுத்து தூக்கி விட்டது நான். இப்போ எனக்கு கால்ஷீட் தந்துவிட்டு நாளைக்கு வேற படத்தின் ஷூட்டிங் இருக்குன்னு இப்போ சொல்றான். நன்றி கெட்ட ஜென்மம்”
சினிமாவின் அடுத்த பாடம் புரிந்தது. நன்றி என்பதை யாரிடமும் எதிர்பார்க்கக் கூடாது. ஹீரோவை விடுத்து மற்ற எல்லோரும் ஊட்டிக்குப் போனோம்.

ஹீரோயின், கமராமென், டைரக்டர், டான்ஸ்மாஸ்டர் என பெரியபதவியாளர்களுக்கு உயர்தர ஓட்டலில் ரூம். என்னைப்போன்ற உதவியாளர்களுக்கு சிறிய லாட்ஜுகளில் ரூம்போட்டார்கள். விசாலமான உயர்தரக் ஹோட்டல் ரூம்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக இருக்க இங்கே நாமோ மிகச்சிறிய ரும்களில் தீக்குச்சிகளைப் போல அடைக்கப்பட்டிருந்தோம். அதில் பெண்குரூப் டான்ஸர்களும் அடக்கம். அவர்களில் ஒருத்திக்கு மட்டும் தனி அறஒ ஒதுக்கினார்கள். அதுக்கான காரணம் எனக்குப் புரியவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு மூன்று ரூமும் பத்து ஆண்களுக்கு இரண்டு ரூமும் என புக்பண்ணியிருந்தார்கள். நான் டைரக்டர் ஆனதும் இதைஎல்லாம் மாற்றி என் யுனிட்டில் எல்லோரும் சமம் என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்பதை மனதின் ஏற்றிக்கொண்டேன். ஊட்டியில் இருக்கும் ஒருமாதமும் இதே நிலைதான் என்பதை நினைக்க வேதனையாக இருந்தது.

காலையில் ஆறுமணிக்கு எழுந்து வெட வெட குளிரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சக உதவியாளர்களுடன் போனேன். கடும் குளிரில் நடுங்கிக் கொண்டுடே ஷூட்டிங்குக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தோம். லைட்பாய்கள் லைட்டுகளை நிறுவ நாம் டைரக்டர் கொடுத்த ஸ்கிரிப்டின் பிரகாரம் காட்சிக்குத் தேவையான ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தோம். எமக்குத் தேவையானதை ஸ்பாட்டுக்குக் கொண்டுவந்து தரும் பொருப்பை புரடக்சன் மானேஜர் செய்துகொண்டிருந்தார். வேலை பழகும் ஆர்வத்திலும் டைரக்டரிடம் நல்ல பெயர் எடுக்கும் எண்ணத்திலும் குளிரையும் பொருட்படுத்தாது பம்பராமகச் சுழன்று வேலைபார்த்துக்கொண்டிருந்தேன்.

புரடக்சன் மானேஜர் என்னை நெருங்கினார். புதுசா என்றார். ஆம் என்ற என்பதிலைக்கேட்டதும் அதுதான் இப்படி உற்சாகமாக வேலை செய்கிறாய் என்றார். சில கணங்கள் அவரின் முகத்தையே உத்துப்பார்த்தநான் “இல்லை சார். சினிமாவில் இருக்கும் வரை இந்த உற்சாகமும் உழைப்பும் என்னிடம் இருக்கும்” என்றேன். என் குரலில் இருந்த உறுதியை கணடதாலோ என்னவோ தெரியவில்லை புன்சிரிப்புடன் என் தோளைத் தட்டிவிட்டுப் போனார். எட்டு மணிக்கு டைரக்டர் வந்தார். அப்போதே ஷூட்டிங் தொடங்கலாம் என்ற அளவுக்கு ஏற்பாடெல்லாம் பக்காவாக இருந்தது.

2

“என்னைய்யா நடராஜா! அதிசயமாக இருக்கு. பத்து மணிக்கு ஷூட்டிங் என்றாலும் ஒழுங்கா இருக்காது. இன்னைக்கு எட்டு மணிக்கே எல்லாம் பக்காவா இருக்கு” என்றார். அப்போதுதான் புரடக்சன் மானேஜரின் பெயர் நடராஜன் என்று தெரிந்தது. டைரக்டரிடம் என்னைக்காட்டி மெல்லிய குரலில் என்னமோ சொன்னார். ஆஹா சினிமாவில் ஒருத்தரை காலைவரிவிடுவது பிரதானமானது. என்னைப்பற்றி என்னமோ போட்டுக்கொடுக்கிறார் போலும் என நினைத்துக்கொண்டேன். டைரக்டர் வந்து தட்டிக்கொடுத்ததும் தான் புரிந்தது இதற்குக் காரணம் நான் என்று சொல்லி இருக்குன்றார் என்று. பரவாயில்லையே சினிமாவிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்களே என்று நினைத்துக்கொண்டேன்.

இயக்குனர் ரெடியாகியும் நாயகியைக் காணவில்லை. நடராஜன் சார் (புரடக்சன் மானேஜரை இனி நடராஜன் என்றே குறிபிடுவோமே) செல்லில் ஹீரோஜினியைத் தொடர்புகொண்டார். இன்னும் அரை மணியில் ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார் என்ற தகவலைச் சொல்லி விட்டு மெஸ்சில் இருந்து வந்த காலைச் சாப்பாட்டைப் பார்வையிட்டார். டைரக்டர் “நடராஜன் வர்மா (ஹீரோஜின்) வரமுன் எல்லோரும் சாப்பிட்டு விடட்டுமே” என்றார். “சாப்பிடலாம்சார். உங்களுக்கு இன்னும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வரவில்லை” என்றார் நடராஜன் சார். ஹோட்டல் சாப்பாடு தேவை இல்லாத செலவு என்று சொன்ன டைரக்டர் மெஸ் சாப்பட்டை எங்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்.

வர்மா வந்ததும் ஷூட்டிங் ஆரம்பமானது. டைரக்சனின் சூட்சுமங்களைக் கவனித்தவாறு இருந்தேன். டைரக்டர் கேட்பதை கணப்பொழுதில் எடுத்துக்கொடுத்தேன். லைட்மேன் இல்லாத இடத்தில் லைட்மேனாக இருந்தேன். தவறு செய்து கமராமென் ஜீவதாஸிடம் திட்டு வாங்கினேன். சிறு இடைவெளியில் கிளாப் அடிக்கக் கற்றுக்கொண்டு அடுத்த ஸீனுக்குக் கிளாப் அடித்தேன். ஹீரோஜின் வர்மாவுக்கு ஜூஸ் குடுத்தேன். டைரக்டருக்கு சிகரெட் குடுத்தேன். இப்படி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப்போல எல்லா இடத்திலும் இருந்து வேலை பார்த்தேன். லஞ் டைம் எனவுன்ஸ்பண்ணினார்கள்.

லஞ் டைமில் ஜீவதாஸ் கூப்பிட்டார். “என்னப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்கே பார்த்தாலும் நீயே இருக்கே. சினிமான்னா ரொம்ப இஸ்டமா” என்றார். “ஆமா சார்” என்று சொல்லிவிட்டு உதவியாளர்களுடன் சேர்ந்து சாப்பிட்டேன். திடீரெனெ காச் மூச் என்ற சத்தம். உனிட்டில் ஒரு பரபரப்பு. என்னடான்னு பார்த்தா ஹோட்டலில் இருந்து வந்த சாப்பாடு நம்மா வர்மா அம்மணிக்குப் பிடிக்கலையாம். சாப்பாட்டை கொண்டுபோன உதவியாளனை திட்டி விட்டு கெரவானுக்குள் புகுந்துகொண்டது. நடராஜன் பவ்வியமாக ஹோட்டல் சிப்பந்திபோல ஆடர் எடுத்து ஹோட்டலுக்கு அறிவித்தார். டைரக்டர் இதைஎல்லாம் கவனிக்காது கதிரையில் குட்டித்தூக்கம் போட்டார்.

Comments

Scroll To Top