நீ – 106
(nee 106)
பாரிலிருந்து வெளியே.. கிளப்பிவிடப்பட்டபோது… நான் நடக்க முடியாமல் தள்ளாடினேன்.
இப்போது எங்கே போவது எனப் புரியாமல்.. ஒரு ஓரமாக நின்று யோசித்தேன்.
அக்காளிடம் போகலாம்… அவள் புருஷன் இருப்பார்…! பெரியம்மா இருப்பாள்… ஆயிரம் கேள்விகள் வரும்..!
வேறு எங்கே போவது..?
‘பவ்யா..’ என்றது… என் குடிகார மூளை.
‘ஆ…’ சட்டென மின்னல் வெட்டியது.
‘அப்பா இருப்பான்.. அவனது இரண்டாவது மனைவி இ ருப்பாள்..’
‘ஆமா… யாரிந்த.. பவ்யா…? ஓ.. ஷிட்… என் தங்கை..! என் அப்பாவின்.. இரண்டாவது மனைவியின்… மகள்..!’
‘வேண்டாம்.. எங்கும் போகவேண்டாம்..! இந்த உலகமே பொய்..! எல்லாம் நயவஞ்சகம்..!
ஒருவரையொருவர்.. ஏமாற்றி.. மோசம் பண்ணும் உறவுகள்.. கொடிய விக்ஷம் கொண்ட பாம்புகளை விடவும்.. நச்சுத்தன்மை கொண்டது..இந்த மனித இனம்..!
‘ஒழிக.. இந்த மனித.. இனம்..! ஒழிக.. இந்த.. கொடிய உறவுகள்.. ஒழிக… ஒழிக….!!’
தடுமாறி விழப்போய தள்ளாடி நின்றேன்…!
”தாமரை…” என்று குழறுவது எனக்கே புரிந்தது….!!!!
-சொல்லுவேன்…..!!!!
What did you think of this story??
Comments