இதயப் பூவும் இளமை வண்டும் – 102
(Idhayapoovum Ilamaivandum 102)
This story is part of a series:
”உனக்கு கல்யாணம் பண்ணனும்னு எண்ணமே இல்லையா..?”
”இல்ல.. போய் உன் வேலைய பாரு..”
”அதில்லடா.. பொண்ணு இப்பக்கூட ரெடியா இருக்கு.. நீ ஓகே சொன்னா போதும்.. நாளைக்கே போயிடலாம்..”
”எங்க போற..?”
”பொண்ணு பாக்க…! பொண்ணு யாரு தெரியுமா..? உங்க மச்சானோட ஒன்னுவிட்ட அக்கா பொண்ணு.. நானும் பாத்தேன். ஆள் சூப்பரா இருக்காடா.. வீடு.. வாசல்னு.. எல்லாம் நல்லா வசதியாத்தான் இருக்காங்க.. உனக்கு நல்லா ஜோடி பொருத்தமும் இருக்கும்..”என அவள் மூச்சுவிடாமல் சொல்ல…
சிரித்தவாறு கேட்டான் சசி.
”அவ்வளவுதானா..?”
”வெளையாடாதடா.. கொஞ்சம் ஒழுக்கமா பதில் சொல்லு.. போய் பாக்கலாமா.?”
”ம்கூம்.. வேண்டாம்..”
”ஏன்டா…?”
”இப்ப வேண்டாம்..”
”அதான்.. ஏன்..?”
”விட்றுன்னா.. பேசாம விட்றேன்.. அத விட்டுட்டு.. ஏன் எதுக்குனுட்டு..” அவன் கோபப்பட…
அவன் தோளில் கை வைத்து..
”அதுக்குத்தான் கேட்டேன்.. இருதயாள ஏதாவது..லவ் பண்றியா.. ஏதாவது பிளான்ல இருக்கியானு..? அப்படி இருந்தா ஆமானு சொல்லிரு.. அவ படிச்சு முடிக்கறவரை வெய்ட் பண்ணலாம்.. என்ன சொல்ற..?”
”ம்.. மூடிட்டு எந்திரிச்சு போ னு சொல்றேன்..!” என்றான் கடுப்புடன்.
ஆனால் குமுதா அவ்வளவு சுலபத்தில் அவனை விட்டுவிடுபவளாக இல்லை.
அவனை மேலும் கேள்விகள் கேட்டுக் குடைய…
டென்ஷனாகி எழுந்து வெளியே போனான்.!
உண்மையில் அவனுக்கே இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை.
இருதயாவுடனான அவன் காதல் எதுவரை நீடிக்கும்.. எவ்வளவு காலம் தொடரும் எனப் புரியாத நிலையில் அவன் எதையும் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளத் தயாராக இல்லை. !
ஆக மொத்தம்.. இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வராமல் இருப்பதே அவனுக்கு நல்லது என தீர்மானித்தான் சசி…..!!!!!!
-வளரும். …….!!!!!!!
What did you think of this story??
Comments