ஆண்மை தவறேல் – 8

(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 8)

Raja 2013-11-18 Comments

“இன்னொரு தடவை அட்டாக் வந்தா.. நான் தாங்க மாட்டேன்னு நெனைக்கிறேன் அசோக்..!!” அவர் அப்படி சொல்ல அசோக் இப்போது பதறினான்.

“ஐயோ டாட்.. ஏன் இப்படிலாம் பேசுறீங்க..? உங்களுக்கு ஒன்னும் ஆ..!!” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மஹாதேவன் இடைமறித்தார்.

“ப்ளீஸ் அசோக்.. என்னை பேச விடு..”

“சரி.. சொல்லுங்க..”

“நான் கண்ணை மூடுறப்போ.. நிம்மதியா கண்ணை மூட நெனைக்கிறேன்.. என் பையன் எந்தக்குறையும் இல்லாம சந்தோஷமா இருப்பான்ற நம்பிக்கையோட கண்ணை மூட நெனைக்கிறேன்..!! நான் போனப்புறம் நீ சந்தோஷமா இருப்பேன்ற நம்பிக்கை.. இப்போ எனக்கு சுத்தமா இல்லாம போச்சு அசோக்..!!”

“டாட்.. தேவையில்லாம நீங்க மனசை போட்டு குழப்பிக்கிறீங்க.. நான் எப்போவும் ஹேப்பியா இருப்பேன்.. ஐ வில் பீ ஆல்ரைட்..!! நம்புங்க ப்ளீஸ்..!!”

“உண்மையான சந்தோஷம் எதுன்னு கூட உனக்கு தெரியலை அசோக்.. நீ எப்படி சந்தோஷமா இருப்பேன்னு நான் நம்புறது..? நான் நல்லா யோசிச்சு ஒரு முடிவெடுத்திருக்கேன்.. எனக்காக நீ ஒன்னு பண்ணனும்.. நான் போறப்போ நிம்மதியா போகனும்னு நெனசேன்னா.. நீ அதை கண்டிப்பா பண்ணியே ஆகணும்..!!”

“எ..என்ன..”

“நான் உனக்காக ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்கேன்.. அவளை நீ கல்யாணம் பண்ணிக்கணும்..!!”

“டாட்.. ப்ளீஸ்..” அசோக் சலிப்பாகவும், கெஞ்சலாகவும் சொன்னான்.

“பொண்ணு வேற யாரும் இல்ல.. நம்ம சதானந்தத்தோட பொண்ணுதான்..!! எஞ்சினியரிங் படிச்சிருக்குறா.. அழகா, லட்சணமா இருக்குறா.. பணம் இல்லாட்டாலும் நல்ல குணமான பொண்ணு.. அமைதியான, மரியாதை தெரிஞ்ச பொண்ணு..!! உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா.. உண்மையான சந்தோஷம் என்னன்னு உனக்கு அவ புரிய வைப்பா..!! அவளை கல்யாணம் பண்ணிக்கோ..!!”

“இல்ல டாட்.. என்னால முடியாது..!!”

“ஏன்..?”

“எனக்கு கல்யாணமே வேணாம் டாட்.. எ..எனக்கு.. எனக்கு அது பிடிக்கலை..!!”

“அதான் ஏன்னு கேக்குறேன்..?”

“நான் எப்போவும் சுதந்திரமா இருக்க நெனைக்கிறேன்.. இன்னொருத்தியை கட்டிக்கிட்டு அவளுக்காக என்னால வாழ முடியாது.. என்னைப் பொறுத்தவரை மேரேஜ்ன்றது கஷ்டத்துக்குள்ள காலெடுத்து வைக்கிறது.. எவளோ ஒருத்திக்காக என் சந்தோஷத்தை இழக்குறது..!! எனக்கு அது வேணாம்..!!”

“ஹ்ம்.. தப்பு அசோக்.. ரொம்ப தப்பு..!! தாம்பத்தியத்தோட அர்த்தத்தை தலைகீழா புரிஞ்சு வச்சுக்கிட்டு பேசுற நீ..!! எடுக்குறதை விட குடுக்குறதுல இருக்குற சந்தோஷம்.. அந்த சந்தோஷத்தோட அருமை.. அதுலாம் உனக்கு புரியலை..!!”

“எனக்கு எதுவும் புரிய வேணாம் டாட்.. என்னை விட்ருங்க.. நான் இப்படியே இருந்துட்டு போறேன்..!!”

“இப்படியேன்னா..? கல்யாணம் செய்துக்காம.. கண்ட கழுதைகளோட சகவாசம் வச்சுக்கிட்டு.. காலம் பூரா இருந்திடலாம்னு பாக்குறியா..?? கஷ்டப்படுவ அசோக்.. பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவ..!!”

“அந்தக்கவலையை என்கிட்டே விட்ருங்க டாட்.. இது என் லைஃப்.. எடுக்கப்போறது இம்பார்ட்டன்ட் டெஸிஷன்.. தயவு செஞ்சு அந்த டெஸிஷனை என்னை எடுக்க விடுங்க..!!”

அசோக் தீர்க்கமாகவும், சற்றே கடுமையாகவும் சொல்ல, மஹாதேவன் இப்போது எதுவும் பேசவில்லை. வாயடைத்துப் போனார். அமைதியாக அசோக்கின் முகத்தையே பார்த்தார். அவனை ஊடுருவுகிற மாதிரி ஒரு பார்வை..!! சில வினாடிகள்..!! அப்புறம் கார்க் கண்ணாடியை மெல்ல கீழ இறக்கியவர்,

“ராமு.. வந்து வண்டியை எடு.. கெளம்பலாம்..!!”

என்று தூரத்தில் நின்ற ராமண்ணாவை அழைத்தார். உடனே ராமண்ணா காரை நோக்கி ஓடிவந்தார். அசோக் காரில் இருந்து கீழே இறங்கிக்கொண்டான். ராமண்ணா காரில் ஏறி ஸ்டார்ட் செய்ய, அசோக் கண்ணாடி திறப்பு வழியாக தன் அப்பாவையே கவலையாக பார்த்தவாறு நின்றிருந்தான். கார் கிளம்பாமல் அங்கேயே நின்று உறுமிக்கொண்டு இருக்க, இப்போது மஹாதேவன் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.

“இது உன் வாழ்க்கைதான் அசோக்.. நீதான் முடிவெடுக்கணும்..!! ஆனா.. முடிவெடுக்குறதுக்கு முன்னாடி.. நான் சொல்றதை கொஞ்சம் நல்லா யோசி..!! நீயும், உன்னை சுத்தி இருக்குறவங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நெனச்சேனா.. நான் சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ..!! இல்ல.. அடுத்தவங்க சந்தோஷத்தை விட, உன்னோட அந்த அற்ப சந்தோஷம்தான் முக்கியம்னு நெனச்சேன்னா.. வேற மாதிரி முடிவெடு..!! இன்னும் ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ.. யோசிச்சு நல்ல முடிவா எங்கிட்ட வந்து சொல்லு..!! எனக்கு புடிச்ச மாதிரி முடிவுன்னா.. நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்..!! இல்ல.. வேற மாதிரி முடிவுன்னா.. நானும் வேற மாதிரி சில முடிவுகள் எடுக்கணும்..!!” அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் அசோக்கை சற்று குழப்பின.

“வே..வேற மாதிரி முடிவெடுக்கப் போறீங்களா..? வேற மாதிரின்னா.. என்ன அது..?? சொத்து எனக்கு இல்லைன்னு எழுதி வைக்க போறீங்களா..??”

“ஹாஹா.. ஆமாம்.. அபப்டித்தான் எழுதி வைக்கப் போறேன்..!! ஆனா.. பணம்ன்ற சொத்து இல்ல.. உரிமைன்ற சொத்து..!!”

“எ..என்ன சொல்றீங்க.. எனக்கு புரியலை..”

“நீ என் புள்ளையே இல்ல.. நான் செத்தா கூட நீ கொள்ளி வைக்க கூடாதுன்னு.. எழுதி வைக்க போறேன்..!!” மஹாதேவன் சொன்னதை கேட்டு அசோக் அதிர்ந்து கொண்டிருக்க, அவர் ராமண்ணாவிடம் திரும்பி சொன்னார்.

“போலாம் ராமு..”

கார் அசோக்கின் முகத்தில் புழுதியை வாரி இறைத்தவாறு, சீறி பறந்தது. ‘டாட்.. டாட்..’ என்று கார் போனபிறகும் அசோக் கத்திக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் நடுரோட்டில் அப்படியே பரிதாபமாக நின்றிருந்தவன், அப்புறம் அவனது காரை நோக்கி நடந்தான். ஸ்டார்ட் செய்து அடையாறு செல்லும் சாலையில் காரை செலுத்தினான்.

அப்பா வீசி சென்ற வார்த்தைகள் அவனுடைய மனதை வெகுவாக பாதித்திருந்தன. அவனது மூளையும் திரும்ப திரும்ப அதையே யோசித்துக் கொண்டிருக்க, அவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது. ஒரு அரை கிலோமீட்டர் கூட சென்றிருக்க மாட்டான். காரை அப்படியே அபவுட் டர்ன் அடித்து திருப்பினான். ஈஞ்சம்பாக்கம் நோக்கி காரை விரட்டினான்.

வீட்டுக்குள் நுழைந்த அசோக், எதிர்ப்பட்ட கௌரம்மாவிடம், அவசரமாகவும் சற்றே கோவத்துடனும் கேட்டான்.

“எங்க அவரை..?”

“மாடிக்கு போயிருக்காரு அசோக்கு.. ஏன்..?”

“அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றவாறு நகர முற்பட்ட அசோக்கை கௌரம்மா தடுத்தாள்.

“இரு இரு..!! டயர்டா இருக்கு, ரெஸ்ட் எடுக்குறேன்னு போயிருக்காரு.. அவரை தொந்தரவு பண்ணாத.. பாவம்..!!”

“இவர் ஏன் இப்படி பண்றாரு கௌரம்மா..?”

“என்ன பண்ணுனாரு..?”

“ரொம்ப ஓவரா பேசுறாரு..!! புள்ளையே இல்ல.. அது இதுன்னு.. ஏதேதோ பேசுறாரு..!!”

“அப்புறம்.. நீ பண்றது மட்டும் என்ன நல்லாவா இருக்கு..? எந்த அளவுக்கு மனசு நொந்து போயிருந்தா.. ஒரு பெத்த தகப்பன் புள்ளையை பாத்து.. இப்படி ஒரு வார்த்தை சொல்லிருப்பாரு..? அவர் சந்தோஷத்துக்காகவாவது நீ அந்தப்பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னவாம்..?”

“என்ன கௌரம்மா.. நீயும் அவர் கூட சேர்ந்துக்கிட்டு..??”

“ஆமாம்.. இந்த விஷயத்துல நான் பெரியவர் பக்கந்தான்..!! உன் போக்கே ஒன்னும் சரியில்லை அசோக்கு.. உனக்கு ஒரு கால்க்கட்டு போட்டாத்தான்.. நீ மாறுவ..!!”

“ப்ச்.. கல்யாணம் பண்ணி வச்சிட்டா.. உடனே ஒரு மனுஷன் மாறிருவானா..? என்ன முட்டாள்த்தனமான லாஜிக் இது..?”

“ஏன் மாற மாட்டான்..? ஒரு பொண்ணு நெனச்சா என்ன வேணா பண்ண முடியும்.. சீரும் செறப்புமா இருக்குறவனையும் சீரழிக்க முடியும்..!! அதே பொண்ணால சீரழிஞ்சு போனவனையும்.. சீரும் செறப்புமா மாத்த முடியும்..!!”

“ம்க்கும்.. அதெல்லாம் சினிமாலதான் நடக்கும்..!!” Aanmai Tamil Kamakathaikal

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top