ஆண்மை தவறேல் – 9
(Tamil Kama Stories - Aanmai Thavarael 9)
Tamil Kama Stories – “இங்க பாரு அசோக்கு.. நீ புடிச்ச புடிலையே நிக்காத.. நான் சொல்றதயும் கொஞ்சம் கேளு..!!”
“ப்ச்.. நீ என்ன புதுசா சொல்லப் போற..?”
“அந்தப்பொண்ணு மஹாலக்ஷ்மி கணக்கா இருக்குது அசோக்கு.. கொள்ளை அழகா இருக்குது.. கொழந்தை மாதிரி சிரிக்குது.. எங்கிட்ட கூட எவ்வளவு மரியாதையா பேசுச்சு தெரியுமா..??”
“ஓஹோ..?? பொண்ணு பாக்குற படலம்லாம் ஏற்கனவே முடிஞ்சு போச்சு போல இருக்கு..??”
“நேத்துத்தான் போய் நான் பாத்துட்டு வந்தேன் அசோக்கு.. அந்தப்பொண்ணு கெடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் கண்ணு.. அவளை கட்டிக்கோயா.. என் ராசால்ல..?”
“போ கௌரம்மா.. நீயும் அவர் மாதிரியே அர்த்தம் இல்லாம பேசிக்கிட்டு..!! யாருக்காகவும் நான் என் முடிவை மாத்திக்கிறதா இல்ல..!!”
அசோக் அந்தமாதிரி பிடிவாதமாக சொல்ல, கௌரம்மா சற்றே எரிச்சலானாள். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே சலிப்பாக பார்த்தவள், அப்புறம் அவனுடைய கையை பற்றி இழுத்தாள்.
“ஏய்.. என்ன.. எங்க இழுத்துட்டு போற என்னை..?”
“என்கூட வா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..”
கௌரம்மா அசோக்கை வலுக்கட்டாயமாக பிடித்து, ஹாலுக்கு இழுத்து சென்றாள். அசோக்கும் என்னவென்று புரியாமலே அவளை பின்தொடர்ந்தான். ஹாலுக்கு கூட்டி சென்ற கௌரம்மா, டீப்பாய் மீதிருந்த அந்த புத்தகத்தை எடுத்தாள். அப்புறம் அந்த புத்தகத்துக்குள் செருகியிருந்த அந்த கவரை எடுத்தாள்.
“என்னது இது..?” அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.
“ம்ம்.. அந்தப்பொண்ணோட ஃபோட்டோ..!! இந்த மூஞ்சியை ஒரு தடவை பாத்துட்டு.. அப்புறம் புடிக்கலைன்னு சொல்லு பாக்கலாம் ..!!”
சொன்ன கௌரம்மா அந்த கவருக்குள் இருந்த ஃபோட்டோவை எடுத்து, அசோக்கின் முகத்துக்கு முன்பாக காட்டினாள். அசுவாரசியமாக அந்த படத்தின் மீது பார்வையை வீசிய அசோக், அப்படியே உச்சபட்ச அதிர்ச்சியில் தத்தளிக்க ஆரம்பித்தான். அவனுடைய உடலெல்லாம் ஜிவ்வென்று ஒருவித சிலிர்ப்பு..!! அந்த போட்டோவில்.. அவள் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
நந்தினி..!!!!!!!
அசோக் அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. அதிர்ச்சியில்.. பிரம்மை பிடித்தவன் மாதிரி உறைந்து போய் நின்றிருந்தான். ‘நந்தினியை கல்யாணம் செய்து கொள்ளத்தானா எல்லோரும் என்னை கட்டாயப் படுத்துகிறார்கள்..? இரண்டு வருடங்களாக எனக்கு கீழே வேலை பார்த்த சதானந்தத்தின் மகள்தானா நந்தினி..? ஒரு காலத்தில் இவளை திருமணம் செய்து கொள்வதற்காக, இவளுடைய காலில் விழக்கூட தயாராக இருந்தேனே..? இன்று இவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி.. ஆளாளுக்கு என் காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்களே..? நானும் வசதியான வீட்டுப் பெண்தான் என்று திமிராக சொன்னாளே..? அந்த வசதி எல்லாம் இப்போது எங்கே போயிற்று..?’
அன்பு, ஆச்சரியம், கோபம், ஏக்கம், கருணை, வெறுப்பு.. என அசோக்கின் மனதுக்குள் ஒரு கலவையான உணர்ச்சிக் கொந்தளிப்பு..!! செய்வதறியாது திகைத்து அவன் அசையாமல் நின்றிருக்க,
“என்ன அசோக்கு.. பேச்சையே காணோம்..? பொண்ணோட அழகுல அப்படியே மூச்சடைச்சு போயிட்டியா..??”
கௌரம்மா இளித்தபடியே கேட்ட கேள்விக்கு அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நந்தினியின் ஃபோட்டோவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் மட்டும், இங்க்லீஷில் எதையோ முணுமுணுத்தன.
“IT’S INTRESTING..!!!!!”
அத்தியாயம் 8
அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து..
அந்த மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் நந்தினி அமர்ந்திருந்தாள். அவளுடைய கன்னத்தை கையொன்று தாங்கியிருக்க, அவளது கண்களில் கவலை தேங்கியிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அவளது தேகத்தில் சதைப்பற்று கூடி சற்று மினுமினுப்பாக தோன்றினாலும், அவளது மனமோ எதைப்பற்றியோ எண்ணி மருகிக்கொண்டு, முகம் களையிழந்து காட்சியளித்தது. கவலையில் இருந்தவள் அவ்வப்போது கண்களை சுழற்றி ஹாஸ்பிட்டல் வாசலையும் பார்த்துக் கொண்டாள்.
அப்போதுதான் வாசலில் அந்த ஆட்டோ வந்து அவசரமாய் நின்றது. பின் சீட்டில் அந்த ஆள்.. முரட்டு தேகமும், முள்முள்ளாய் தாடியும், முகமெங்கும் வழியும் கண்ணீருமாய்..!! அவருக்கருகில் அந்த பெண்மணி.. நிறைமாத வயிறும், தலையை சுற்றி துணிக்கட்டும், அந்த கட்டை மீறி நெற்றியில் வழியும் இரத்தமுமாய்..!! அந்தப்பெண்மணியும்.. வலியிலும், வேதனையிலும் ‘ஆ.. ஆ.. ஆ.. ஆ..’ என்று அரற்றிக் கொண்டு இருந்தாள்..!!
அவர்களைப் பார்த்ததுமே நந்தினியிடம் ஒரு பதற்றம் பரவ, நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டாள். ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய அந்த முரட்டு ஆள், இப்போது தன் லுங்கி மடிப்பை தடுமாற்றமாய் பிரிக்க, திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் கத்தினார்.
“துட்டுலாம் ஒன்னும் வேணாய்யா.. சீக்கிரம் உன் வூட்டம்மாவை உள்ள தூக்கினு போ..!!”
ஒருகணம் திகைத்த அந்த ஆள் அப்புறம் தன் மனைவியை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் அங்குமிங்கும் அலைபாய, அவசரமாய் ஹாஸ்பிட்டலுக்குள் ஓடி வந்தார். எதிர்ப்பட்ட நந்தினியிடம்,
“எ..எமர்ஜன்சி வார்டு எங்கம்மா இருக்குது..?” என கேட்டார் பதட்டமான குரலில்.
“நே..நேரா போய்..” என்று முதலில் கையை நீட்டிய நந்தினி, அப்புறம்
“என் பின்னால வாங்க.. நான் கூட்டிட்டு போறேன்..”
என்றுவிட்டு அந்த ஆளுக்கு முன்னால் ஓடினாள். அவரும் தன் மனைவியை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, ‘ஒன்னுல்லம்மா.. ஒன்னுல்லம்மா.. இதோ வந்துட்டோம்மா..’ என்று வேதனையில் துடிக்கும் மனைவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, நந்தினியை பின் தொடர்ந்தார்.
“என்னங்க ஆச்சு.. தலைலாம் ரத்தம்..?” நந்தினி ஓடிக்கொண்டே கேட்க,
“புள்ளத்தாச்சி பொம்பளையை கார்ல இடிச்சுனு.. நிக்காம கூட போயிட்டான்மா.. ஒரு பொறம்போக்கு தே..புள்ள..!!” அவர் அவள் பின்னால் ஓடிக்கொண்டே சொன்னார்.
“பாரம் ஏதும் புல் பண்ணனுமாம்மா..?” அவர் கவலையாக கேட்க,
“எமர்ஜென்சிக்கு அதெல்லாம் தேவையில்லங்க.. அப்புறமா ஃபில் பண்ணிக்கலாம்..” நந்தினி ஆறுதலாய் சொன்னாள்.
அவசர சிகிச்சை பிரிவை அடைந்ததும் நாலைந்து மருத்துவமனை ஊழியர்கள் எதிர்ப்பட்டார்கள். ஓடிவரும் இவர்களை பார்த்ததும், உடனே அவர்களையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனடியாய் ஒரு ஸ்ட்ரெச்சர் இழுத்துவரப்பட்டது.
“அப்படியே ஸ்ட்ரெச்சர்ல வைங்க..!! என்ன ஆச்சு..??” அந்த கேரளத்து நர்ஸ் கவலையாய் கேட்டதற்கு,
“கார் மோதிடுச்சும்மா..!!” மனைவியை ஸ்ட்ரெச்சரில் கிடத்திக்கொண்டே அவர் சொன்னார்.
பணியாளர்களால் அந்த ஸ்ட்ரெச்சர் உள்ளே இழுத்து செல்லப்பட, கதவு மூடப்பட்டது. உள்ளே நுழைய முயன்ற அவரை, நர்ஸ் தடுத்தாள்.
“இருங்க இருங்க.. நீங்க உள்ள போககூடாது.. இங்கயே இருங்க..!!”
அவ்வளவு நேரம் பரபரப்பாய் இருந்த அந்த முரட்டு ஆசாமி, இப்போது சட்டென சோர்ந்து போனார். அப்படியே மடிந்து போய் தரையில் பொத்தென்று அமர்ந்தார். குழந்தை மாதிரி கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.
“எப்படியாவது என் பொண்டாட்டியும் புள்ளையும் காப்பாத்தி கொடுத்திடும்மா.. உன்னை என் தெய்வமா நெனச்சு கேக்குறேன்..!!”
என்றார் அந்த நர்ஸை ஏறிட்டு..!! அவருடைய மனைவிக்கு சிகிச்சை உள்ளே மருத்துவர்கள் செய்ய, இங்கே இவர் சம்பந்தமே இல்லாமல் நர்ஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். அந்த காட்சியைப் பார்த்த நந்தினியோ உடலெல்லாம் சிலிர்த்துப் போனாள். என்னவென்று சொல்லமுடியாத மாதிரி ஒரு உணர்ச்சி அவளுடைய மனதை பிசைந்தது. கண்களில் லேசாய் நீர் துளிர்த்தது. ஒரு கணம் தன் பார்வையை மெல்ல சுழற்றி, அந்த மருத்துவமனையை நாலாபுறமும் பார்த்தாள்.
எங்கெங்கும்.. நோயாளிகள்.. அவர்களுடன் வந்தவர்கள்.. மருத்துவர்கள்.. அடுத்தவர் உயிரைக் காப்பாற்ற அங்குமிங்கும் கவலையாய் ஓடித்திரிந்த பணியாளர்கள்..!! எத்தனை விதமான நோய்கள்.. எத்தனை விதமான சிகிச்சைகள்..? எத்தனை விதமான வலிகள்.. அதற்கு எத்தனை விதமான மருந்துகள்..? எத்தனை விதமான கண்ணீர்கள்.. அந்த கண்ணீர் துடைக்க எத்தனை விதமான விரல்கள்..? இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அழுது அரற்றிக்கொண்டிருக்க.. பிறந்த குழந்தை ஒன்று அடுத்த அறையில் விடாமல் வீறிட்டுக் கொண்டிருக்கிறது..!! வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர விரும்புவர்கள், முதலில் வந்து பார்க்க வேண்டிய இடம் மருத்துவமனை என்று தோன்றியது..!!
“கொ..கொஞ்சம் எழுந்து இந்த சேர்ல உக்காந்துக்கங்க..”
நந்தினி அந்த ஆளின் தோளைப்பற்றி எழுப்பி, அருகில் கிடந்த நாற்காலியில் அமர வைத்தாள். இன்னும் அழுது கொண்டே இருந்த அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, மலர்ந்த முகத்துடனும், இதமான குரலுடனும் சொன்னாள்.
“இங்க பாருங்க.. உன் வொய்ஃபுக்கும், குழந்தைக்கும் ஒன்னும் ஆகாது.. அழாதீங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க..!!”
அவள் அந்த மாதிரி ஆறுதலும், நம்பிக்கையுமாய் சொல்ல, இப்போது அவருடைய அழுகை பட்டென நின்றது. கருணை கொஞ்சும் நந்தினியின் முகத்தையே கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல் பார்த்தார். அப்புறம் தன் கண்களை அவர் துடைத்துக் கொண்டபோது, அவருடைய முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. மெலிதாக புன்னகைத்தார்.
Comments