அன்புள்ள ராட்சசி – பகுதி 44
“என் அம்மாவை பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த அருகதையும் இல்லடா.. எச்சக்கல நாயே..!! வீட்டை விட்டு வெளில போ..!!”
“ஏய்..!! என்ன பெரிய பத்தினி மாதிரி..”
மனோகர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. மீரா பொறுமை இழந்து போனாள்..!! கிச்சன் மேடை மீதிருந்த அந்த பளபளப்பான, கூர்மையான கத்தியை.. படக்கென கையில் எடுத்தாள்..!! அதை சரக்கென மனோகரின் முகத்துக்கு முன்பாக நீட்டி.. ஆவேசமாக கத்தினாள்..!!
“இன்னும் ஒரு வார்த்தை பேசின.. அக்கா புருஷன்னு கூட பாக்க மாட்டேன்.. அறுத்து எறிஞ்சிடுவேன்..!!!”
அவ்வளவுதான்..!! அவளுடைய முகத்திலும், கண்களிலும், குரலிலும் கொப்பளித்த கோபத்தில்.. மனோகர் மிரண்டு போனான்..!! பயந்துபோய்.. மெல்ல பின்வாங்கினான்..!!
கத்திமுனையிலேயே அவனை வாசல் வரை தள்ளி சென்ற மீரா.. பிறகு அவனை வெளியே விட்டு கதவை அறைந்து சாத்தினாள்..!! அறைந்து சாத்திவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தாள்..!! உள்ளத்தில் எழுந்த வேதனையிலும், கோபத்திலும்.. அவளது உதடுகள் படபடத்தன.. அவளுடைய உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது.. மார்புகள் ரெண்டும் சரக் சரக்கென மேலும் கீழும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தன..!! கையில் கத்தியுடன் வெறிபிடித்தவள் மாதிரி நின்றிருந்தாள்..!!
பிறகு அவளுக்கு என்னாயிற்றோ.. அப்படியே கால்கள் மடங்கி, தரையில் சரிந்தாள்.. தலையை குனிந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்..!! அவளுடைய மனம்.. அத்தனை நேரம் அணிந்திருந்த வீராவேசமான முகத்தினை தூக்கி எறிந்துவிட்டு.. ஒரு கோழைத்தனமான முகத்தினை அணிந்து கொண்டது.. மீராவையும் அவ்வாறு அழுதிட வைத்தது..!!
அந்த மாதிரி அழுது கொண்டே.. நீண்ட நேரம் நிலைகுலைந்து போய் படுத்திருந்தாள்..!! பிறகு வீட்டுக்குள் டெலிபோன் ஒலிக்கிற சப்தம் கேட்டதும்.. மெல்ல எழுந்தாள்..!! பொறுமையாகவே நடந்து உள்ளறைக்குள் சென்றாள்..!! டெலிபோன் ரிசீவரை எடுத்து காதில் வைத்து.. வறண்டு போன குரலிலேயே சொன்னாள்..!!
“ஹலோ..!!”
“ஹாய் பேபிஈஈ..!! ஐ ஆம் பேக்..!!!”
அடுத்த முனையில் ஒலித்த அந்த குரலை கேட்டதும்.. மீரா அப்படியே அதிர்ந்து போனாள்..!! அந்த குரலை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்த்திரவில்லை..!! அவளுடைய இமைகள் படக்கென விரிந்துகொள்ள.. இருதயம் சிலவினாடிகள் துடிப்பதை மறந்து நின்று போனது..!! அந்த குரல்.. அந்த அரவத்தின் குரல்.. காதல் என்ற பெயரில் ஏமாற்றி, அவளது கற்பை சூறையாடி விஷத்தை கக்கி சென்ற அந்த கயவனின் குரல்..!! மீராவுடைய உடம்பு இப்போது ஆத்திரத்தில் முறுக்கேறிக் கொள்ள.. கையில் இருந்த கத்தியை இறுகப் பற்றினாள்..!!
– தொடரும்
What did you think of this story??
Comments