அசோக் காலிங் அசோக் – 9
(Tamil New Sex Stories - Ashok Calling Ashok 9)
“சரி சீனி.. நீ சொல்றதுலாம் எனக்கு புரியுது..!! லேகாவை கழட்டி விடனும்.. அவ்ளோதான.. விடு.. நான் பாத்துக்குறேன்..!!”
“என்ன பண்ணப் போற..?”
“இதுலாம் சப்பை மேட்டர் சீனி.. பொண்ணுகளை கரெக்ட் பண்றதுதான் கஷ்டம்.. கழட்டி விடுறது ரொம்ப ரொம்ப ஈஸி..!! எங்கிட்ட வுடு.. நான் பாத்துக்குறேன்..!! நாளைக்கே அவளை கழட்டி வுடுறேன் பாரு..!!”
“ஓகே ஜூனி..உன் இஷ்டத்துக்கே விடுறேன்.. ஆனா.. டெயிலி நீ என்ன பண்ணினேன்னு.. போன்ல எனக்கு அப்டேட் கொடுக்கணும்..!! நமக்கு இன்னும் மூணு நாள்தான் டைம் இருக்கு.. அதுக்குள்ளே நீ கழட்டி விடனும்.. அதையும் ஞாபகம் வச்சுக்கோ..!!”
“ஓ..!! மூணாவது நாள்தான் அந்த பேராப்பு வரப்போகுதா..??”
“ஆமாம்..!!”
“அது என்னன்னு கொஞ்சம் சொல்லேன்..?”
“ம்ஹூம்.. அதை நான் சொல்ல மாட்டேன்..!! உன் மேல எனக்கு இன்னும் முழுசா நம்பிக்கை வரலை…!! நம்பிக்கை வந்ததும் சொல்றேன்..!!”
“ஓகே சீனி.. விடு..!! வேறென்ன.. நாளைக்கு பேசலாமா..?”
“இரு இரு.. நான் இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்குறேன்…”
“என்ன..?”
“வீடியோ கால்..!!”
“வீடியோ காலா..? என்னய்யா சொல்ற..?”
“இந்த மெசினோட நான் ஒரு கேமரா கனெக்ட் பண்ணிருக்கேன்.. இப்போ நான் அதை ஆன் பண்றேன்.. உன் செல்போன்ல என் மூஞ்சி தெரியுதான்னு பாரு.”
“யோவ்.. ஒரு நிமிஷம் இருய்யா.. இதுக்கு ஏதும் எக்ஸ்ட்ரா சார்ஜ் வராதே..?”
“ஐயையே.. ஏன் ஜூனி இவ்வளவு பிசினாரியா இருக்குற நீ..?”
“யோவ்.. ஏன் சொல்லமாட்ட..?? உனக்கென்ன.. கோடிக்கணக்குல அப்பீஸ் வச்சிருக்குற..? நான் கோல்ட்பில்டர் வாங்க கூட வக்கில்லாம இருக்குறேன்..!!”
“சரி சரி விடு.. ரொம்ப ஃபீல் பண்ணாத..!! இதுக்குலாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஆகாது.. தைரியமா பாரு..!! ம்ம்ம்.. கேமரா ஆன் பண்ணிட்டேன்.. பாரு..!!”
நான் காதோடு வைத்திருந்த செல்போனை இப்போது கையில் எடுத்து பார்த்தேன். ஸ்பீக்கர் மோட் ஆன் செய்தேன். என் செல்போன் திரை எங்கும் எக்கச்சக்கமாய் புள்ளிகள்..!! பின்பு அந்த புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து, சீனியரின் முகம் தெரிந்தது. சற்றே மங்கலாக..!! அப்புறம் அதுவும் மெல்ல மெல்ல தெள்ளத்தெளிவாக ஆனது..!!
“ஹாய் ஜூனி..!!!!!!!” சொல்லிக்கொண்டே சீனியர் கையசைத்தார்.
“சொல்லு சீனி..”
“நான் தெரியிறேனா..?”
“ம்ம்.. தெரியிற தெரியிற..!! ஏன் சீனி… நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத…”
“என்ன..??”
“உன் தலையை எதும் எறும்புப் புத்துக்குள்ள வுட்டுட்டயா..?”
“ஏன் கேக்குற..?”
“இல்ல.. எறும்பு கறும்புன மாதிரி.. மண்டைலாம் ஒரே முள்முள்ளா இருக்குதேன்னு கேட்டேன்..!!”
“நக்கலா..??? 2035ல இந்த ஹேர்ஸ்டைல்தான் ஜூனி.. ஃபேஷன்..!!”
“ஓஹோ..?? அப்புறம்.. உதடு என்ன.. ஒரு ஓரமா வீங்கிருக்கு..??”
“அதுவா..? அது.. லேட்டஸ்டா லேகாட்ட வாங்கினது..!!” சீனியர் தடித்துப் போன தனது உதட்டை தடவிக் கொண்டே சொன்னார்.
“ம்ம்ம்.. உன் மூஞ்சியை பாத்ததும் உன் மேல நம்பிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு சீனி..”
“தேங்க்ஸ்.. தேங்க்ஸ்..!! ஓவராலா எப்படி இருக்கு என் மூஞ்சி..?”
“ம்ம்ம்.. சந்தானத்துக்கு சயின்டிஸ்ட் கெட்டப் போட்ட மாதிரி இருக்கு..!!”
“சந்தானமா..? அது யாரு..?”
“நீ மறந்திருப்ப..!! நம்ம ரெண்டு பேருக்கும் அந்த ஆளு படத்தை போட்டுத்தான்.. இந்த ஆளு கதை எழுதிட்டு இருக்குறான்..!!”
“ஓஹோ..??”
“ஓகே சீனி.. உன் மூஞ்சியை பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம்.. வேறென்ன..?”
“வேற ஒண்ணுமில்ல ஜூனி..!! நாளைக்கு பேசலாம்.. ஆல் தி பெஸ்ட்..!!”
“ஓகே சீனி.. குட்நைட்..”
“குட்நைட்..!!”
சொல்லிவிட்டு சீனியர் காலை கட் செய்தார். நானும் செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, கட்டிலில் விழுந்தேன். லேகாவை கழட்டி விடுகிறேன் என்று சீனியரிடம் சொல்லியாயிற்று..!! இப்போது அவளை கழட்டி விடவேண்டும்..!! என்ன செய்து கழட்டிவிடுவது..?? குப்புறப் படுத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்தோம்… நானும்.. என்னோடு சேர்ந்து ஸ்க்ரூவும்..!! Mulai Kasakkum Tamil New Sex Stories
– தொடரும்
What did you think of this story??
Comments