கண்ணாமூச்சி ரே ரே – 61

(Tamil Kamakathaikal - Kannamoochi Rae Rae 61)

Raja 2014-07-19 Comments

Tamil Kamakathaikal – “உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குது கண்ணு..!!” குரல்முழுக்க கவலையுடன் வனக்கொடி அவ்வாறு சொல்ல, ஆதிராவின் உதட்டில் ஒரு விரக்திப் புன்னகை..!!

“ஹ்ஹ.. அவ என் தங்கச்சிம்மா.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!! அவ என்னை என்ன பண்ணிடுவா..?? எனக்கு ஒன்னும் ஆகாது.. நீங்க கெளம்புங்க..!!”

13

சொல்லும்போதே ஆதிராவுக்கு கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.. வனக்கொடியும் புடவைத்தலைப்பால் வாயைப்பொத்தி, துக்கத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றாள்..!!

வனக்கொடியும் சிறிது நேரத்தில் கிளம்பிவிட.. அத்தனை பெரிய, பிரம்மாண்டமான வீட்டில் ஆதிரா மட்டும் இப்போது தனித்து விடப்பட்டிருந்தாள்..!! இதுவரை தாமிராவுடன் அவள் விளையாடிய ‘Game or Shame’ விளையாட்டுக்கள் அனைத்துமே.. அவர்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விளையாட்டுக்கள்.. அக்கா தங்கைக்கு இடையே அந்த மாதிரி ஒரு வழக்கம் இருப்பதே அவர்களது வீட்டில் யாருக்கும் தெரியாது..!! நேற்று இரவு கைபேசியில் ‘Game or Shame’ என்று குரல் ஒலித்ததுமே.. ஆதிரா முதலில் முடிவு செய்தது இதுதான்.. தாமிராவை சந்திக்க இந்தமாதிரி தனித்திருப்பது மிக மிக அவசியம் என்று கருதினாள்.. அதனால்த்தான் இப்போது வனக்கொடியையும், தணிகைநம்பியையும் வலுக்கட்டாயாமாக அனுப்பிவைத்துவிட்டு அவள்மட்டும் தனித்திருக்கிறாள்..!!

வனக்கொடி சென்றபிறகு குளியலறைக்குள் புகுந்துகொண்ட ஆதிரா.. கொட்டுகிற ஷவருக்கு அடியில், சிலைபோல நெடுநேரம் நின்றிருந்தாள்..!! டைல்ஸ் பதிக்கப்பட்ட பக்கவாட்டு சுவற்றில் இரண்டு கைகளையும் அழுத்தமாக ஊன்றி.. கூந்தல் நனைத்து முகத்தில் வழிகிற நீர்க்கோடுகளுடன், தனது அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்..!!

குளித்துமுடித்து வெளியே வந்தபோது, மேற்குவானம் செந்நிறமாகிப் போயிருந்தது.. சூரிய வெளிச்சம் வற்றிப்போயிருக்க, இருள் கவிழ ஆரம்பித்திருந்தது..!! தனது அறைக்கு திரும்பி வேறு உடை மாற்றிக்கொண்டாள் ஆதிரா.. மிக மிருதுவான, உடலை உறுத்தாத ஒரு உடை..!! அவளது பார்வை எங்கோ நிலைகுத்திப் போயிருக்க.. அவளது புத்தி முழுதும் ஒரே விஷயத்தை பற்றி கூர்மையாக சிந்தித்துக் கொண்டிருக்க.. அவளது ஒரு கை மட்டும் அனிச்சையாக சீப்புகொண்டு கூந்தல் வாரியது, சிக்கெடுத்து முடிச்சிட்டது.. கழுத்து, காது, மூக்கு அணிந்திருந்த ஆபரணங்களை எல்லாம் கழற்றி எடுத்து, மேஜையில் வைத்தது..!!

ஆதிராவின் மனநிலை ஒருவித அழுத்தத்துக்கு உட்பட்டிருக்க.. அவளுடைய பார்வைக்குள் ஒருசில மாயபிம்பங்கள் ஆங்காங்கே தோன்றின..!! மிக நிதானமாக அவள் படியிறங்கி கீழே வரும்போது.. பக்கவாட்டில் அவளுடன் நடந்துவந்தாள் அவளது கொள்ளுப்பாட்டி.. முகத்தை திருப்பி ஆதிராவை ஒரு அமானுஷ்யப் பார்வை பார்த்தவாறே சொன்னாள்..!!

“நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்.. நீயும் அந்தமாதிரி புடிவாதமா நின்னு உன் புருஷனை மீட்டுக்க ஆதிரா..!! பயத்தை விடு.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!”

“ம்ம்.. சரி பாட்டி.. பயப்படல..!!” மாயபிம்பத்துக்கு பதில் சொல்லிக்கொண்டே படியிறங்கினாள் ஆதிரா.

வீட்டுக்கு வெளியே இப்போது ச்சோவென்று மழைகொட்டிக் கொண்டிருந்தது.. பளிச் பளிச்சென்று அடிக்கடி மின்னல் கீற்றுகள்.. திடும் திடுமென்று அவ்வப்போது இடிமுழக்கங்கள்..!! காற்றின் வேகமும் பலமாக இருக்க.. ஜன்னல் கதவுகள் சடார் சடாரென்று கம்பிகளை அறைந்துகொண்டு கிடந்தன..!!

வீட்டின் நுழைவாயிலை மட்டும் விட்டுவிட்டு, மற்ற கதவுகளையும் ஜன்னல்களையும் ஒவ்வொன்றாக அடைத்து தாழிட்டாள் ஆதிரா..!! படக் படக்கென்று அடித்துக்கொண்ட ஒரு ஜன்னல் கதவை, இழுத்து அடைக்க அவளது கையை வெளியே நீட்டியபோது.. ஜன்னலுக்கு வெகுஅருகே, கொட்டுகிற மழையில் நனைந்தவாறு நின்றிருந்தார் அந்த மாந்திரிகவாதி.. முகம் முழுவதும் கொசகொசவென்று தாடி மீசையுடன்..!! இவளது கண்களை அப்படியே கூர்மையாக உற்றுப்பார்த்தவாறு கேட்டார்..!!

“ஆதிரா.. நல்ல பேர்.. கண்ணகிக்கு நிகரான கற்புக்கரசி.. புருஷன் உசுரை காப்பாத்த தீயில பாஞ்சவ.. சரியா..??”

“ச..சரிதான் சாமி..!!”

“காப்பாத்திடுவியா உன் புருஷனை..??”

“காப்பாத்திடுவேன்.. என் உயிரை கொடுத்தாவது அவர் உயிரை காப்பாத்திடுவேன்..!!”

“ஹாஹாஹாஹாஹா..!!!!”

14

அமானுஷ்யமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர் பட்டென மறைந்துபோனார்.. அந்த ஜன்னல்கதவை அறைந்து சாத்திவிட்டு, தீர்க்கமான ஒரு பார்வையுடன் திரும்பினாள் ஆதிரா..!!

நடந்துசென்று.. வீட்டுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கிற மெயின் ஸ்விட்சை படக்கென கீழிழுத்தாள்..!! வீடே இப்போது சட்டென ஒரு அடர்இருளில் மூழ்கிப் போனது.. பிரதான நுழைவாயிலில் மட்டும் மசமசப்பாய் ஒரு வெளிச்சம்..!! குண்டூசி விழுந்தால்கூட அதன் ஓசை கேட்குமாறு அப்படியொரு நிசப்தம் இப்போது வீட்டுக்குள்..!! அந்த நிசப்தத்தை கிழித்துக்கொண்டு..

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!!!!!!!” என்று மேஜை இழுபடுகிற சப்தம்..!!

ஓரமாய் கிடந்த ஒரு மரமேஜையை ஹாலின் மையத்துக்கு நகர்த்தினாள் ஆதிரா..!! மிகவும் கனமான மேஜை.. நகர்த்துவதற்கு கடினமாக இருந்தது.. பற்களால் உதட்டை அழுந்த கடித்துக்கொண்டு இழுத்தாள்..!! இப்போது மேஜையின் இன்னொரு பக்கம் செம்பியனின் மாய பிம்பம்.. அந்தப்பக்கம் இருந்து மேஜையை தள்ளி இவளுக்கு உதவுவது போலொரு தோற்றம்..!! அவ்வாறு தள்ளிக்கொண்டே மூச்சிரைப்பான குரலில் சொன்னார்..!!

“ஆ..ஆவிகளை நாம தேடிப்போறது ரொம்ப கஷ்டம் ஆதிரா.. அ..அதுங்கள நம்மளத்தேடி வரவைக்கிறதுதான் ஈஸியான வழி..!!”

“ஆமாம் அங்கிள்.. அதைத்தான் இப்போ பண்ணப்போறேன்..!!”

“அவளை வர வை.. விளையாண்டு பாரு.. உன் புருஷன் உனக்கு கெடைக்கிறானான்னு பாக்கலாம்..!!”

“கண்டிப்பா கெடைப்பாரு..!!”

“கெடைச்சா நல்லதுதான்..!! ஹ்ஹ்ம்ம்ம்.. ஆ..ஆனா ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சுக்க ஆதிரா.. மனுஷங்களோட மனநிலைமை, குணாதிசயம், நியாயதர்மம்லாம்.. ஆவிகளுக்கு பொருந்தாது..!! பேய்ங்க எந்த நேரத்துல எதை நெனைக்கும், என்ன பண்ணும்னு.. நம்மால உறுதியா சொல்ல முடியாது.. அவகிட்ட ஜாக்கிரதையா நடந்துக்க..!!”

“ம்ம்.. புரியுது அங்கிள்.. பாத்துக்குறேன்..!!”

“ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…!!!!!!!”

இல்லாத செம்பியனின் உதவியோடு, இழுத்துப் போட்டாள் மரமேஜையை..!! இருட்டாக இருந்த வீட்டுக்குள் ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தாள்..!! தாமிராவுக்கு சொந்தமான சில பொருட்களை மேஜைமீது பரப்பினாள்.. நாற்காலி இழுத்துப்போட்டு வசதியாக அமர்ந்துகொண்டாள்..!! சாம்பிராணி கொளுத்தி அதனை புகைய வைத்தாள்.. அதன்மீது அந்த க்ரிஸ்டல் பவ்லை கவிழ்த்து வைத்தாள்..!!

கண்களை மெலிதாக மூடிக்கொண்டு.. அந்த க்ரிஸ்டல் பவ்லின் இருபுறமும் கைகளை வைத்துக் கொண்டாள்..!! சிலவினாடிகள் எடுத்துக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருமுகப்படுத்தி ஒற்றைப்புள்ளியில் குவித்தாள்..!! தங்கையை சந்திக்கிற உத்வேகத்துடன்.. மனதுக்குள்ளேயே அவளது பெயரை திரும்ப திரும்ப சொல்லி அழைத்தாள்..!!

‘தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!!!’

இப்போது இமைகளை மெல்ல பிரித்தாள்.. பவ்லுக்குள் கசிகிற புகையையே மிக உன்னிப்பாக உற்று நோக்கினாள்..!! வெளியே மழையின் சடசட சப்தம்.. அவ்வப்போது திடுமென்ற இடியோசை.. வீட்டுக்குள் மட்டும் ஒரு அசாத்திய அமைதி..!!

அந்த அமைதியுடனே ஆதிரா சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள்..!! நொடிகள் கரைந்தன.. நிமிடங்கள் ஆகின.. அந்த நிமிடங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிச் சென்றுகொண்டிருக்க.. ஆதிராவிடம் மட்டும் எந்த அசைவுமில்லை.. அந்த பவ்லுக்குள் நிறைகிற புகையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! வெளிப்புற குளிரையும் மீறி.. அவளது முகத்தில் இப்போது மெலிதாக வியர்வை முத்துக்கள் துளிர்க்க ஆரம்பித்திருந்தன..!!

மிகவும் விஸ்தாரமான அந்த பழங்கால வீட்டின் மையத்தில்.. க்ரிஸ்டல் பவ்ல் கவிழ்க்கப்பட்ட மேஜைக்கு முன்பாக ஆதிரா மட்டும் தனியே அமர்ந்திருந்தாள்..!! அவளுக்கு நேர் எதிரே வீட்டின் நுழைவாயில் அகலமாக திறந்து கிடந்தது.. மற்ற கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டு வீட்டுக்குள் ஒரு புழுக்கம்..!! ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்திகள் மெலிதான மஞ்சள் வெளிச்சத்தை கசிந்துகொண்டிருந்தன.. அவ்வப்போது வெளிவானத்தில் வெட்டிய மின்னலின் பளீர் வெளிச்சமும், அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்துடன் சேர்ந்துகொண்டது..!!

15

இப்போது வீட்டுக்குள் திடீரென்று சிலுசிலுவென குளிர்காற்று வீச ஆரம்பித்தது.. ஆதிராவின் தளிர்மேனியை அந்தக்காற்று ஜில்லென வருட, அவளது ஆடையும் கூந்தலும் மெலிதாக தடதடத்தன..!! வீட்டுக்குள் வீசிய குளிர்காற்று அந்த வாசனையையும் அள்ளி வந்திருந்தது.. கமகமவென அந்த அறையை நிறைத்தது மகிழம்பூ வாசனை..!!

வாசனை வந்தவுடனேயே தங்கையின் வருகையையையும் உணர்ந்துகொண்டாள் ஆதிரா.. அவளது இமைகள் அகலமாக விரிந்துகொன்டாலும், அவளது கவனம் முழுவதும் கசிகிற புகையிலேயே நிலைத்திருந்தது..!! அதேநேரம் அந்த க்ரிஸ்டல் பவ்லிலும் சரேலென வெப்பம் ஏற ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளிலேயே சரசரவென சூடாகிப்போய் அனலடித்து கொதித்தது.. தாங்கமுடியாமல் தகித்தது..!! ஆதிராவின் உள்ளங்கை பொசுங்க ஆரம்பிக்க.. அதை அவள் பொருட்படுத்தவில்லை.. அந்த பவ்லில் இருந்து கையை விலக்கிக் கொள்ளவில்லை..!! உதடுகளை மட்டும் அழுந்த கடித்தவாறு.. வேதனை பொறுத்துக் கொண்டாள்..!!

“ச்ச்சிலீர்ர்ர்ர்ர்ர்..!!” வெப்பத்தை தாங்கமுடியாமல் வெடித்து சிதறியது அந்த க்ரிஸ்டல்.

Comments

Scroll To Top