நெஞ்சோடு கலந்திடு – 4
(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 4)
“அடச்சீய்.. தோசை அவருக்கு இல்ல..!!”
“அப்புறம்..?”
“அந்த குரங்குக்கு..!!” அவள் குரங்கு என்று விளித்தது திவ்யாவைத்தான்..!!
“ஏன்.. அவளுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்..?”
“அவளுக்கு சப்பாத்தி பிடிக்காது.. சப்பாத்தி பண்ற அன்னைக்கு.. அவளுக்கு தனியா ஏதாவது செஞ்சு கொடுத்திடனும்..!! இல்லனா.. மகாராணிக்கு கோவம் வந்துடும்..!! நாலு நாள் சாப்பிட மாட்டா.. பட்டினி கெடக்குறேன்னு வீட்டுல ஆக்டிங் குடுத்துட்டு.. பாய் கடைல போய்.. பரோட்டாவா தின்பா..!! நமக்கெதுக்கு அந்த பாவம்னுதான் அவளுக்கு ஏதாவது தனியா செஞ்சு கொடுத்திடுவேன்..!!”
“ம்ம்ம்.. உங்க ரெண்டு பேர் ரிலேஷன்ஷிப்பை நெனச்சா.. புல்லரிக்குதுடி எனக்கு..!! ஆமாம்.. உன் புருஷனை எங்க..? சத்தத்தையே காணோம்..?? இன்னும் எந்திரிக்கலையா..?”
“அப்போவே எந்திரிச்சுட்டாரு.. குளிச்சுட்டு இருக்காரு..!!”
“இவ்ளோ நேரம் பாத்ரூம்ல என்ன பண்றாரு.? வழக்கமா.. டைனிங் டேபிள்ளதான ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ணுவாரு..? நல்லா தின்னு தின்னு.. இப்போ பீப்பா மாதிரி ஆயிட்டாருக்கா..!!”
“உதை வாங்க போற படவா..!! அவருக்கு மனசுல எந்த கெட்ட எண்ணமும் இல்லடா.. அதான் உடம்பும் வஞ்சனை இல்லாம வளருது..!! உன் அருமை ஃப்ரண்டு ஒருத்தி இருக்காளே.. அவளை பாத்தியா..? அவளுக்கு மனசு ஃபுல்லா வெனயம்.. அதான் உடம்புல ஒன்னும் ஒட்ட மாட்டேன்னுது..!!’
“போதும்.. போதும்.. புருஷனுக்கு ரொம்பத்தான் சப்போர்ட்டு..!!”
பேசிக்கொண்டே அசோக் சாப்பிட்டு முடித்தான். கைகழுவிக்கொண்டு..
“அப்போ.. நான் கெளம்புறேன்க்கா..!!”
என்று சித்ராவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் கிச்சனை விட்டு வெளியே வந்தபோது,
“அசோக்.. ஒரு நிமிஷம் இங்க வந்துட்டு போயேன்..”
என்று திவ்யா தன் அறையில் இருந்து தன் தலையை மட்டும் வெளியே நீட்டி அவனை அழைத்தாள். அசோக் எதுவும் புரியாமலேயே திவ்யாவின் அறையை நோக்கி நடந்தான். கதவை தள்ளி உள்ளே சென்றான். கைகளை விரித்தவாறு திவ்யா நின்றிருந்தாள்.
“இன்னைக்கு நான் எப்படி இருக்கேன்..? இந்த ட்ரெஸ் ஓகேவா..?”
என்று முகமெல்லாம் பிரகாசமாய் கேட்டாள் திவ்யா. ‘என்ன இது.. இன்று.. ஆளாளுக்கு அலங்காரம் செய்துகொண்டு என்னிடம் வந்து காட்டுகிறார்கள்..?’ என்று அசோக் தன் மனதுக்குள் நினைத்து கொண்டான். ஆனால்.. செல்வா கேட்டபோது எழுந்த ஒரு எரிச்சலான உணர்வு இப்போது இல்லை.. அதற்கு எதிர்ப்பதமான ஒரு உணர்வு..!! திவ்யாவை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளவெடுத்தான்..!!
சிவப்பு நிறத்தில் ஒரு புடவையை நேர்த்தியாக உடுத்தியிருந்தாள். அலை அலையாக கேசம்..!! சலவை செய்த நிலவினை போன்றதொரு ஒளிமுகம்..!! உருளும் திராட்சைகளாய் இரு கருவிழிகள்..!! உருண்டையான கூர்மையான நாசி..!! தேன் சொட்டும் ஆரஞ்சு சுளைகளாய் பிளந்து கொண்ட இதழ்கள்..!! சந்தனத்தில் பாலை குழைத்து பூசிவிட்ட மாதிரியான மேனி வண்ணம்..!! தேர்ந்த சிற்பி ஒருவன் செதுக்கிய மாதிரியான தேகக்கட்டு..!! தேவதை மண்ணில் குதித்த மாதிரியான.. திவ்யா..!!
“வாவ்…!!!! யூ லுக் கிரேட்..!!!!”
“ரியல்லி..???”
“எஸ் திவ்யா..!! என்ன விசேஷம் இன்னைக்கு..?”
“இன்னைக்கு காலேஜ்ல நான் ஒரு பேப்பர் ப்ரசன்ட் பண்ண போறேன்..”
“ஓ..!! பசங்கள்லாம்.. அப்படியே சொக்கிப் போகப் போறானுக..!!”
“போடா.. வெளையாடாத..!!”
“இல்லடி.. சீரியஸ்..!!”
“ம்ம்.. அப்போ ஓகேதான..? எதுவும் குறை இல்லையே..?”
அவள் அப்படி கேட்டதும், அசோக் இன்னொரு முறை அவளை மேலும் கீழும் பார்வையிட்டான். அப்புறம் சற்றே கேலியான குரலில் சொன்னான்.
“குறை எதுவும் இல்ல.. ஏதோ ஒன்னு அதிகமா இருக்குற மாதிரிதான் இருக்குது..”
“ஏய்…” திவ்யா முறைத்தாள்.
“அடச்சீய்..!! இதை சொன்னேன்டி.. இந்த ஸ்டிக்கர் பொட்டு..!! இது வேணாம்.. எடுத்துடுறேன்..!!” சொல்லிக்கொண்டே திவ்யாவின் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை அசோக் அகற்றினான்.
“மேட்சிங்கா ஒரு பொட்டு வச்சா.. நல்லாருக்கும்னு நெனச்சேன்..!!”
“ம்ஹூம்.. நல்லால்ல..!! அது இல்லாம இருந்தாத்தான் நல்லாருக்கு..!!”
“ம்ம்.. சரி..!! நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்..!!”
“சரி திவ்யா.. நான் கெளம்பவா..?”
“இரு.. நானும் வர்றேன்.. என்னை பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணிடு..!!”
“ஓகே.. வா..!!”
பத்தே நிமிடங்களில் திவ்யா சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள். அசோக் பைக்கில் கொண்டுபோய் அவளை பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்தான். மீண்டும் தன் அறைக்கு வந்தான். செல்வா இன்னும் திரும்பியிருக்கவில்லை. கதவை திறந்துகொண்டு தனது அறைக்குள் நுழைந்தான். மெத்தையில் பொத்தென்று விழுந்தான். ஓரிரு நிமிடங்கள் அப்படியே சீலிங்கை வெறித்தபடி கிடந்தான்.
பின்பு புரண்டு.. கை நீட்டி.. அலமாரியில் இருந்து அந்த டைரியை எடுத்தான். பக்கங்களை புரட்டினான். அவன் தேடிய பக்கம் வந்ததும் நிறுத்தினான். ஆர்வமாகவும் ஆசையாகவும் பார்வையை வீசினான்..!!
அங்கே திவ்யா அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்..!! அவன் நேற்று இரவு தூக்கம் வராமல் எழுந்து.. பென்சிலாலேயே நேர்த்தியாக வரைந்த திவ்யாவின் ஓவியம்..!! கண்களாலேயே ஆசை தீர.. திவ்யாவின் அழகை அள்ளிப் பருகினான் அசோக்..!! வலது கையின் ஐந்து விரல்களாலும் மென்மையாக அந்த ஓவியத்தை வருடினான்..!! பின்பு.. அந்த விரல்களின் இடுக்குக்குள்ளே.. அவ்வளவு நேரம் மறைத்து வைத்திருந்த.. திவ்யா அறியாமலே அவளிடமிருந்து களவாடிய.. அந்த ஸ்டிக்கர் பொட்டை ஓவியத்தின் நெற்றியில் ஒட்டினான்..!! Bra Tamil Kama Stories
– தொடரும்
What did you think of this story??
Comments