நெஞ்சோடு கலந்திடு – 20
(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 20)
Tamil Kama Stories – “அவர் நம்பருக்கு கால் பண்ணினா.. எடுக்கவே மாட்டேன்றார்..!! எனக்கு ரொம்ப பயமா இருக்கு அசோக்..!!” திவ்யாவுடைய பதற்றம் அவள் குரலில் அப்பட்டமாக தெரிந்தது.
“எங்க குடு.. நான் ட்ரை பண்றேன்..!!” அசோக் கேட்க, திவ்யா செல்போனை அவனிடம் நீட்டினாள்.
“ப்ளீஸ் அசோக்.. எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! அவருக்கு ஏதாவது ஆச்சுனா.. அந்த குற்ற உணர்ச்சியே என்னை கொன்னு போட்டுடும்.. அப்புறம் நானும் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!”
“ப்ச்..!! பைத்தியம் மாதிரி உளறாத திவ்யா.. அதுலாம் அவருக்கு ஒன்னும் ஆகாது..!!”
அசோக் கால் லாக்ஸ் எடுத்து, திவாகரின் நம்பருக்கு மீண்டும் டயல் செய்தான். முதல் தடவை கால் பிக்கப் செய்யப்படவில்லை. இரண்டாம் முறை பிக்கப் செய்யப்பட்டது. அசோக் ஹலோ சொல்வதற்கு முன்பே, அடுத்த முனையில் திவாகரின் குரல் மிக மிக உருக்கமாக ஒலித்தது.
“உயிரோடதான் இருக்கேன் திவ்யா.. இன்னும் சாகலை.. ஆனா.. இன்னும் கொஞ்ச நேரத்துல போயிடுவேன்.. இன்னொரு கைல பாய்சன் பாட்டில் வச்சுக்கிட்டுத்தான் இப்போ பேசிட்டு இருக்கேன்..!!”
“ஹலோ.. தி..திவாகர்.. நான் திவ்யா இல்லை.. அ..அசோக் பேசுறேன்..!!”
அவ்வளவுதான்..!! அதற்குமுன் உருக்கமாக ஒலித்த திவாகரின் குரல் இப்போது பட்டென்று கிண்டலாக.. ஒருமாதிரி எகத்தாளமாக மாறியது..!!
“அசோக்கா..?? திவ்யாவோட மொபைலை வச்சுக்கிட்டு நீங்க என்ன ஸார் பண்றீங்க…??”
“திவ்யா இங்க பக்கத்துலதான் இருக்குறா திவாகர்.. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்..!!”
“எனக்கு உங்கிட்ட பேச விருப்பம் இல்லை அசோக் தம்பி.. ஃபோனை திவ்யாட்ட குடு..!!”
“ப்ளீஸ் திவாகர்.. ஒரே ஒரு நிமிஷம்..!!”
“அவகிட்ட குடு..!!”
“அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க திவாகர்.. கொஞ்சம் பொறுமையா..”
“ஹாஹா.. இங்கபாரு.. இந்த அட்வைஸ் கொடுக்குற வேலை எல்லாம் திவ்யாவோட நிறுத்திக்கோ.. நான் என்ன பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும்..!! ஃபோனை அவகிட்ட குடு..!! குடுடா..!!” திவாகர் கத்தினான்.
அசோக் காதிலிருந்த செல்போனை கையில் எடுத்து பார்த்தான். அவனுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. ‘ஆரம்பத்தில் உருக்கமாக பேசியவன், உடனடியாய் ஏன் எகத்தாளமாக பேசுகிறான்..?? சாவின் விளிம்பில் இருப்பவன் ஏன் திவ்யாவிடம்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறான்..?? உயிரையே விட முடிவெடுத்தவனுக்கு இவ்வளவு கோபம் எங்கிருந்து வரும்..?? சாகப் போகிறவன் சத்தம் போடாமால் மாத்திரைகளை முழுங்குவானா.. இல்லை.. ஊருக்கெல்லாம் மெசேஜ் அனுப்பி ஸீன் போடுவானா..??’
அசோக்கிற்கு அந்த மாதிரி ஒரு எண்ணம் வந்ததுமே, திவாகர் பொய்யாக நடிக்கிறான் என்று தோன்றியது. சாகப்போவதாக பொய் சொல்லி, திவ்யாவை தன்வசம் இழுக்க முயலுகிறான் என்று தோன்றியது. செல்போனை திவ்யாவிடம் கொடுக்காமல் பட்டென காலை கட் செய்தான். ஆனால்.. திவ்யாவோ பதற்றம் கொஞ்சமும் குறையாதவளாய் கேட்டாள்.
“எ..என்ன அசோக்.. என்னாச்சு..?”
“ஒன்னும் ஆகலை.. விடு..”
“அவர் என்ன சொன்னார்..?”
“அவர் ஏதோ உளர்றாரு திவ்யா.. நீ வா..!!” என்று அவளுடைய புஜத்தை பற்றி இழுத்தான்.
“எங்க கூப்பிடுற என்னை..?”
“அங்க சாமிக்கு பொங்கல் வைக்க டைம் ஆச்சு.. எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..!!”
அசோக் சொல்ல, திவ்யா உச்சபட்ச கோவத்துக்கு உள்ளானாள். படக்கென்று அவனுடைய கையை உதறினாள்.
“கையை விடு அசோக்..!!! கையை விடு..!!!!!!! அங்க ஒருத்தன் சாகக் கெடக்குறான்.. சாமிக்கு பொங்கல் வைக்கிறதுதான் உனக்கு முக்கியமாப் போச்சா..??”
“ஐயோ.. திவ்யா.. அவர் சூசயிட்லாம் பண்ணிக்கிற ஆள் மாதிரி தெரியலை.. அவர் பேசுறதை வச்சுப் பார்த்தா.. அவர் சும்மா ஸீன் போடுற மாதிரி இருக்கு..!!”
“ஜஸ்ட் அவரோட வாய்ஸை மட்டும் வச்சு.. அவர் நடிக்கிறார்னு எப்படி நீ முடிவு பண்ணுற..? அவரைப் பத்தி உனக்கு புரியலை அசோக்..!!”
“அவரைப் பத்தி உனக்குத்தான் புரியலை திவ்யா.. அவர் உன்னை எமோஷனல் பிளாக்மெயில் பண்ண ட்ரை பண்றார்..!! அது உனக்கு புரியலை..!!”
“அவர் என்ன வேணா பண்ணிட்டு போட்டும்.. இது ஒரு உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்..!! சப்போஸ்.. அவர் உயிர் போச்சுனா.. உன்னால திருப்பி தர முடியுமா அசோக்..? திருப்பி தர முடியுமா..????” திவ்யா காட்டுத்தனமாய் கத்த, அசோக் ஸ்தம்பித்து போனான். அவனிடம் அந்த கேள்விக்கு சரியான பதில் இல்லை.
“தி..திவ்யா நீ தேவையில்லாம பயப்படுற.. அ..அவருக்கு ஒன்னும் ஆகாது..!!”
“ஃபோனை குடு அசோக்..!! ஃபோனை குடு..!!!!!”
“திவ்யா.. அவசரப்படாத.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!”
“ஸாரி அசோக்.. முடியாது..!! ஃபோனை குடு..!!!!!”
திவ்யா அசோக்கிடம் இருந்து வெடுக்கென்று ஃபோனை பறித்தாள். திவாகரின் நம்பரை அமுக்கி டயல் செய்தாள். காதில் வைத்துக் கொண்டாள். அசோக் அதிசயித்து போனான். தன் கண்முன் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தான். ‘நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்.. நீ சொன்னா கரெக்டாதான் இருக்கும்..’ என்று சிறுவயதில் இருந்து சொல்லிக்கொண்டிருந்த திவ்யா இப்போது எங்கே போனாள்..?? எப்போதிருந்து இப்படி மாறிப் போனாள்..?? அசோக்கிற்கு புரியவில்லை..!!
“ஹலோ.. ஹலோ.. திவாகர்..!! நா..நான் திவ்யா..!!!”
“………………………………….”
“ஸாரி திவாகர்.. ஸாரி.. ஸாரி.. ஸாரி…!!
“………………………………….”
“நோ திவாகர்.. அப்டிலாம் பண்ணிடாதீங்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என்னை மன்னிச்சுடுங்க.. நான் தப்பு பண்ணிட்டேன்.. பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! நான் உங்ககிட்ட அப்படி பேசிருக்க கூடாது..!! தப்புதான்… என்னை மன்னிச்சுடுங்க.. ப்ளீஸ்..!!”
“………………………………….”
“ஐயோ…!!!! வேணாம் திவாகர்.. வேணாம்.. என்னை கொல்லாதீங்க.. தயவு செஞ்சு அப்படிலாம் பண்ணிடாதீங்க..!!”
“………………………………….”
“அப்புறம் நானும் செத்து போயிடுவேன்..!!”
“………………………………….”
“சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க..!!”
“………………………………….”
“அவ்ளோதான..? சொல்றேன்..!! ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ திவாகர்.. ஐ லவ் யூ ஸோ மச்..!! ப்ளீஸ் திவாகர்.. அந்த பாட்டிலை உடைச்சு தூக்கி எறிங்க..!!”
திவ்யா சத்தம் போட்டு அலறினாள்..!! அலறிவிட்டு தேம்பி தேம்பி அழுதாள்..!! தன் கண்முன்பே தனது ஆருயிர்க்காதலி.. இன்னொருவனுக்கு ‘ஐ லவ் யூ..!!’ சொல்ல.. அசோக்கிற்கு நெஞ்சம் குமுறியது..!! இதயம் சில்லு சில்லாய் உடைந்து சிதறியது..!!
அத்தியாயம் 22
இருட்டுப் புதருக்குள் இரை தேடி ஊர்ந்து செல்லும் பாம்பை போல, இரும்புத் தண்டவாளத்தின் மீது பாண்டியன் எக்ஸ்பிரஸ் பாய்ந்து கொண்டிருந்தது. விருத்தாச்சாலத்தை தாண்டி, சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. கம்பார்ட்மன்ட்டுக்குள் நிறைய விளக்குகள் இப்போது அணைக்கப்பட்டிருக்க, ஒரு மந்தமான வெளிச்சம் மட்டுமே மிச்சம் இருந்தது. பிரயாணிகள் அனைவரும் தூங்கிப் போயிருக்க, ரயிலின் ‘தடக் தடக்.. தடக் தடக்..’ ஒலியும், ‘பாம்…’ என்ற அவ்வப்போதைய அலறலும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
அசோக்கிற்கு அப்போதுதான் விழிப்பு வந்தது. சுருங்கிப்போன முகமும், கண்களுமாக எழுந்தான். அவன் படுத்திருந்த அப்பர் பர்த்துக்கு பக்கவாட்டில் இருந்த பார்த்தில், திவ்யா நித்திரையில் ஆழ்ந்திருந்தாள். கீழே இருந்த பர்த்துகளில் சித்ராவும், கார்த்திக்கும் ஆளுக்கொரு பக்கமாய் நீட்டி நிமிர்ந்திருந்தார்கள்.
அசோக் கீழே இறங்கினான். தட்டுத்தடுமாறி டாய்லட் நோக்கி நடந்து சென்றான். அவனுடைய தடுமாற்றத்திற்கு காரணங்கள் இரண்டு..!! ஒன்று தூக்க கலக்கம்..!! மற்றொன்று.. நேற்று இரவு ஸ்டேஷனை அடைந்ததும், ‘புக் ஷாப் சென்று விகடன் வாங்கி வருகிறேன்..’ என்று சொல்லி எஸ்கேப் ஆகி, ஒயின்ஷாப் சென்று விஸ்கியை அவசரமாய் உள்ளே விட்டுக் கொண்டதுதான்..!! திரும்பி வந்தபோது தம்பியின் கையில் விகடனை தேடி ஏமாந்த சித்ரா..
“எங்கடா..? கைல ஒன்னையும் காணோம்..?” என்று கேட்க,
“அடிச்சுட்டேன்..” என்று உளறினான் அசோக்.
“என்னது..?? அடிச்சுட்டியா..??” சித்ரா குழம்ப,
“ப்ச்.. காது கேட்காதா உனக்கு..? படிச்சுட்டேன்னு சொன்னேன்.. பழைய விகடனை வச்சிருக்காய்ங்க..!!” என்று சலிப்பாக சமாளித்த அசோக், அப்பர் பர்த்தில் ஏறி அப்பாவி மாதிரி படுத்துக் கொண்டான்.
இப்போது.. டாய்லட் சென்று இயற்கை உந்துதலை நிவர்த்தி செய்து கொண்டு வெளியே வந்தான். ‘அவசரமாய் புகை வேண்டும்’ என்று அவனுடைய நுரையீரல் ஆர்டர் போட்டது. ரயிலில் புகை பிடிப்பது தவறு என்று புத்திக்கு உறைத்தாலும், மனது கேட்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான். ஆள்நடமாட்டமே இல்லை. அனைவரும் தூங்கிப் போயிருந்தனர். இப்படி ஓரமாய் நின்று தம்மடித்து விட்டு செல்லலாம் என்று முடிவு செய்தான்.
சிகரெட் பாக்கெட் திறந்து பார்த்தான். ஒரே ஒரு சிகரெட்தான் மிச்சமிருந்தது. உதட்டில் பொருத்திக்கொண்டு தீக்குச்சி உரசினான். கதவு திறந்திருக்க காற்று ஜிலுஜிலுவென உள்ளே அடித்துக் கொண்டிருந்தது. சிரமப்பட்டு, நாலைந்து குச்சிகளை விரயம் செய்த பின்னரே, சிகரெட்டின் தலையில் கொள்ளி வைக்க முடிந்தது. கஷ்டப்பட்டு சிகரெட் பற்றவைத்துக் கொண்டதும்தான் காமடியான அந்த காரியத்தை செய்தான்.
Comments