ஐ ஹேட் யூ பட் – 41

(Tamil Hot Stories - I Love U But 41)

Raja 2013-11-08 Comments

“அவர் என்ன சொல்வாரு..?? நம்ம கம்பனி மானத்தை நான் வாங்கிட்டதா சொன்னாரு.. எல்லா ப்ளானும் என்னால ஸ்பாயில் ஆயிடுச்சுன்னு சொன்னாரு.. கேவலமா திட்டினாரு..!! மதியம் இன்னொரு எக்ஸ்ப்ளனேஷன் மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்காரு..!! ஆனா.. அந்த மீட்டிங் அட்டன்ட் பண்ண நான் இருக்க மாட்டேன்..!!”

“இ..இருக்க மாட்டியா..?? எ..என்ன சொல்ற..??” அசோக் குழப்பமாய் கேட்டான்.

“வேலையை ரிஸைன் பண்ணப்போறேன்.. லெட்டர் டைப் பண்ணிட்டு இருக்குறேன்..!!” ப்ரியா சொல்ல, அசோக் டென்ஷனாகிப் போனான்.

“ஹேய்.. இப்போ என்னாயிடுச்சுன்னு ரிஸைன் பண்ற நீ..??”

“இன்னும் என்ன ஆகணும் அசோக்..?? இத்தனை நாளா நீ மட்டும் சொல்லிட்டு இருந்த.. இன்னைக்கு எல்லாரும் என்னை ஸ்டுபிட்னு சொல்றாங்க.. நான் ஸ்டுபிட்ன்ற விஷயம் யு.எஸ் வரை போயிடுச்சு..!! புரிஞ்சுக்கோ அசோக்.. என்னால முடியாது.. ஆளாளுக்கு வந்து கேள்வி கேட்பாங்க.. இத்தனை நாளா என்னை ஆஹா ஓஹோன்னு பாராட்டினவங்களே, இப்போ வந்து என்னால எல்லாம் நாசமா போச்சுன்னு சொல்வாங்க.. கேவலமா பார்ப்பாங்க..!! அந்த அவமானத்தை என்னால தாங்கிக்க முடியாது அசோக்.. அதைவிட ரிஸைன் பண்ணிடுறது பெட்டர்..!!”

“அறிவில்லாம பேசாத ப்ரியா.. நீ என்ன தப்பு பண்ணின.. ரிஸைன் பண்றதுக்கு..?? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு..!! பாலாட்ட போய் நான் பேசுறேன்.. எல்லா பிரச்சினைக்கும் நாந்தான் காரணம்னு உண்மையை ஒத்துக்குறேன்.. அவங்க என் மேல என்ன ஆக்ஷன் எடுக்குறாங்களோ எடுக்கட்டும்.. உனக்கு எந்தப் பிரச்சினையும் வராம நான் பாத்துக்குறேன் ப்ரியா.. சரியா..??” அசோக் தவிப்பாக கேட்க, ப்ரியா வேண்டாம் என்பது போல தலையை அசைத்தாள்.

“வேணாம் அசோக்.. ஆளாளுக்கு கேள்வி கேட்டு உன்னை டார்ச்சர் பண்ணுவாங்க.. உன் பெர்ஃபார்மன்ஸ் ரெகார்ட்ல இது ஒரு ப்ளாக் மார்க் மாதிரி ஆயிடும்.. அந்த அவார்ட் உனக்கு கெடைக்காது.. அடுத்த வருஷம் ப்ரோமோஷன் உனக்கு இருக்காது..!!”

“ஸோ வாட்..??”

“தேவை இல்லாம இந்த பிரச்னைல நீ சிக்கிக்காத.. உனக்கு இந்த கஷ்டம்லாம் வேணாம்.. நானே இதை ஹேண்டில பண்ணிக்குறேன்.. தப்புலாம் என் மேலதான்னு நான் ஒத்துக்கிட்டு ரிஸைன் பண்ணிடுறேன்.. இந்த பிரச்சினை ஈசியா முடிஞ்சிடும்..!! நீ உன் இடத்துக்கு போ.. இதெல்லாம் கண்டுக்காம உன் வேலையை பாரு.. போ..!!” சொல்லிக்கொண்டே ப்ரியா டைப் அடிப்பதை தொடர்ந்தாள்.

“நோ.. உன்னை ரிஸைன் பண்றதுக்கு நான் அல்லோ பண்ண மாட்டேன்..!!”

“புரியாம பேசாத அசோக்.. நான் ரிஸைன் பண்றதுதான் இதுக்கு ஒரே வழி..!!”

“நான் செஞ்சதுக்கு நீ ஏன் தண்டனை அனுபவிக்கனும்..??”

“இதை நான் தண்டனையாவே நெனைக்கல அசோக்..!! நீ செஞ்சதால கெடைச்சதுதான் இது எல்லாமே..!!!! இந்த பேர்.. இந்த பாராட்டு.. இந்த மதிப்பு.. இந்த டி.எல் போஸ்ட்.. எல்லாமே உன்னால எனக்கு கெடைச்சதுதான்..!! இப்போ அதெல்லாம் உனக்காவே இழக்குறது.. எனக்கு ஒன்னும் பெரிய விஷயமா தோணலை.. சந்தோஷமா நான் ரிஸைன் பண்றேன்.. போதுமா..??” ப்ரியா அசோக்கை ஏறிட்டு நிதானமாக சொல்ல, அவன் சற்றே ஆடிப்போனான்.

“ப்..ப்ரியா ப்ளீஸ்..!!” என்றான் திணறலாக.

“டைப் அடிச்சு முடிச்சுட்டேன் அசோக்.. அனுப்ப போறேன்..!!”

“வே..வேணாம் ப்ரியா.. நான் சொல்றதை கேளு..!!”

இப்போது அசோக்கின் கண்களிலும் நீர் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. ‘உன்னை கம்பனியை விட்டே தூக்குறேன் பாரு..’ என்று ஒருகாலத்தில் அவளிடம் சவால் விட்டது இப்போது நினைவுக்கு வந்தது. அவனே அறியாமல்.. அவன் செய்த ஒரு காரியம்.. இப்போது அவள் கம்பனியை விட்டு வெளியேற காரணம் ஆகிவிடுமோ என்று பயந்தான்..!! அது நடந்துவிடக்கூடாது என்று தவித்தான். ‘ப்ளீஸ் ப்ரியா.. ப்ளீஸ் ப்ரியா..’ என்று கெஞ்சினான்.

ப்ரியாவும் கண்களில் நீர் அரும்ப இவன் முகத்தையே காதலாக பார்த்தாள். உதடுகள் பிரித்து மெலிதாக புன்னகைத்தாள். அவனைப் பார்த்து அவ்வாறு புன்னகைத்துக்கொண்டே, தனது வலது கையை லேப்டாக்கு நகர்த்தி, பட்டென்று என்டர் தட்டினாள்.

“அனுப்பியாச்சு..!! ஐ க்விட்..!!” என்றாள் புன்னகை சற்றும் மாறாதவளாய்.

அசோக் இப்போது அவளையே பிரமிப்பாக பார்த்தான். மனதுக்குள் பொங்கிய அவள் மீதான காதல் வெள்ளம், எல்லா அணைகளையும் உடைத்து எறிந்துவிட்டு, காட்டாறாக ஓடியது. ப்ரியா லேப்டாப்பை மூடி வைத்தாள். எழுந்து கொண்டாள். தன்னுடைய பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். மிக இயல்பான குரலிலேயே அசோக்கிடம் சொன்னாள்.

“காலைல இருந்து என்னால முடியலை அசோக்.. ஒரே தலைவலி .. டார்ச்சரா இருந்தது..!! இப்போத்தான் ரொம்ப நிம்மதியா இருக்கு..!! நான் வீட்டுக்கு கெளம்புறேன்.. போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்..!!”

அசோக் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான். ப்ரியாவின் முகத்தையே காதலும் ஏக்கமுமாய் பார்த்துக் கொண்டிருந்தான். ப்ரியா இப்போது அவளுடைய கையால் அசோக்கின் கையை பற்றிக்கொண்டாள். கண்களில் ஒரு தெளிவும், உதட்டில் ஒரு மெலிதான புன்முறுவலுமாக சொன்னாள்.

“இத்தனை நாளா உன்கூட எதுக்கெதுக்கோ போட்டி போட்டிருக்கேன் அசோக்.. சின்னப்புள்ள மாதிரி..!! வேணுன்னே உன்னை.. லேட் நைட் வொர்க் பண்ண வச்சிருக்கேன்.. அப்ரூவ் பண்ணின லீவை கேன்சல் பண்ணிருக்கேன்.. உனக்கு புடிக்காத வேலையா குடுத்து டென்ஷன் பண்ணிருக்கேன்.. ஸ்குவாஷ் கோர்ட்ல அடிச்சு போட்டிருக்கேன்.. ஹாஹா..!!”

“ஹ்ம்ம்..!!”

“எல்லாமே ஒரு கொழந்தையோட கோவம் மாதிரிதான் அசோக்.. உடனே வரும்.. உடனே போயிடும்.. உள்ளலாம் வச்சிருக்க மாட்டேன்..!! அந்த கோவத்துல நான் என்ன செஞ்சிருந்தாலும்.. உன் மேல இருந்த லவ் மட்டும்.. ஒரு பர்சன்ட் கூட எப்போவும் குறைஞ்சது இல்ல..!! வெளையாட்டுல வேணா உன்னை ஜெயிக்க நெனச்சிருப்பேன்.. காதல்ல உன்கிட்ட தோக்கனும்னுதான் எப்போவும் நெனச்சேன் அசோக்..!! என்னை நம்புறல..?? ம்ம்..??”

ப்ரியா பரிதாபமாக கேட்க, அசோக்கிற்கு உள்ளுக்குள் கொப்பளித்த உணர்ச்சியை அடக்கிக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. பற்களால் உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டான். ப்ரியாவின் முகத்தையே ஏக்கமாக பார்த்தான்.

“ம்ம்ம்..!!” என்று மெல்ல தலையை அசைத்தான்.

“கெளம்புறேன் அசோக்.. பை..!!”

ப்ரியா சொல்லிவிட்டு, திரும்பி விடுவிடுவென நடந்தாள். கதவை திறந்து வேகமாய் வெளியேறினாள். அசோக் அப்படியே செயலற்றுப்போய் நின்றிருந்தான்.

அவள் சென்றபிறகு சில வினாடிகள் கழித்து, மெல்ல தலையை சுழற்றி அந்த அறையை ஒருமுறை பார்த்தான். எங்குமே ஒரு வெறுமை நிறைந்திருப்பதாய் அவனுக்கு தோன்றியது. ப்ரியாவுடைய டேபிள் மீது பார்வையை வீசினான். அலங்காரத்திற்காக அவள் வைத்திருந்த பொருட்களை எல்லாம் அவள் இப்போது எடுத்து சென்றிருக்க, இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் அங்கே மிச்சம் இருந்தன. ஒன்று.. அவன் உருவாக்கிய காம்பொனன்ட்டுக்காக ப்ரியாவுக்கு கிடைத்த நினைவுப்பரிசு.. இன்னொன்று அவள் அமெரிக்காவில் இருந்து அவனுக்காக வாங்கி வந்திருந்த கைக்கடிகாரம்..!!

அசோக் கொஞ்ச நேரம் அந்த இரண்டு பொருட்களையுமே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய மூளை எதையோ சுறுசுறுப்பாக யோசித்துக் கொண்டிருந்தது. அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், கண்களில் துளிர்த்திருந்த நீரை அவசமாய் துடைத்துக் கொண்டான். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறே, கை நீட்டி அந்த கைக்கடிகாரத்தை எடுத்துக் கொண்டான். இடது கையில் அணிந்து கொண்டான். அறையை விட்டு அவசரமாய் வெளியேறினான். பாலாவின் அறைக்கு நடந்தான். இவன் உள்ளே நுழைந்ததுமே இவனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் மாதிரி அவர் சொன்னார்.

“வா அசோக்.. நானே உன்னை வர சொல்ல நெனச்சேன்..!! வா.. உன்கூட கொஞ்சம் பேசணும்.. உக்காரு..!!”

“எ..என்ன பேசணும்..??” அசோக் அவருக்கு எதிரே அமர்ந்தவாறே கேட்டான்.

“இந்த ப்ரியா என்ன வேலை பண்ணி வச்சிருக்குறா பாத்தியா அசோக்..?? க்ளயண்ட்ஸ் கோடிக்கணக்குல பணத்தை கொட்டி கொடுத்துட்டு.. ஃபர்ஸ்ட் டைம் நம்ம ப்ராடக்ட் பாக்குறதுக்காக ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க.. கடைசில அவங்க பாத்ததுலாம்.. ‘ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..’ தான்..!! ச்சே.. நேத்து நைட்டுல இருந்து எவ்வளவு மெண்டல் டார்ச்சர் தெரியுமா..?? க்ளையன்ட்ட இருந்து எவ்வளவு ப்ரெஷர் தெரியுமா..?? எல்லாம் இந்த ப்ரியாவாலதான்.. அவளோட ஸ்டுபிடிட்டியாலதான்..!! ப்ரியா தரப்போற தலைவலியை தாங்கிக்க ரெடியா இருங்கன்னு நீ ஒருநாள் சொன்ன.. அதோட அர்த்தம் இப்போதான் எனக்கு முழுசா புரியுது..!! தேங்க் காட்.. அவளே இப்போ ரிஸைன் பண்ணிட்டு போயிட்டா..!! இனி.. ஆகவேண்டியதை பாக்கனும்.. அதுக்குத்தான் உன்னை வர சொல்ல நெனச்சேன்..!! இவ பண்ணின மெஸ்ஸப்ல இருந்து ப்ராஜக்டை மீட்டு கொண்டு வர நீதான் சரியான ஆளு..!!”

Comments

Scroll To Top