ஐ ஹேட் யூ பட் – 41

(Tamil Hot Stories - I Love U But 41)

Raja 2013-11-08 Comments

Tamil Hot Stories – “டேய்.. அசோக்கு..!!” என்று கத்தியே விட்டான்.

“ஆமாண்டா.. ப்ரியாவை மேரேஜ் பண்ணிக்க எனக்கு சம்மதம்..!! அப்பாட்ட பேசு.. நீயே கஷ்டப்பட்டு தேடி கண்டுபுடிச்ச பொண்ணுன்னு சொல்லி.. அவர்ட்ட நல்ல பேர் வாங்கிக்கோ..!!” அசோக் கண்சிமிட்டினான்.

“ஹாஹா..!! ஹேய் செல்வி.. இங்க வாடி.. என் தம்பி என்ன சொல்றான்னு கேளு..!!” ராஜேஷ் கிச்சன் பக்கம் திரும்பி கத்த,

“என்னங்க.. என்னாச்சு..??” என்று கேட்டவாறே செல்வி ஓடிவந்தாள்.

ராஜேஷே அவளிடம் விஷயத்தை சொல்ல, அவளுக்கும் இப்போது தாங்க முடியாத சந்தோஷம். ‘அடடடா.. இப்பத்தாண்டா உனக்கு புத்தியே வந்திருக்கு.. குடும்பத்து மேல அக்கறை உள்ள புள்ள மாதிரி இப்பத்தான் நீ நடந்துக்கிட்டிருக்குற..!!’ என்று அசோக்கை பார்த்து பெருமிதமாக சொன்னாள். அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு கல்யாணப் பேச்சுதான் அங்கு ஓடிக்கொண்டிருந்தது. ‘அப்பா, அம்மாவிடம் எப்போது சொல்வது.. வரதராஜனிடம் எப்படி பேசுவது.. எத்தனை நாட்களுக்குள் கல்யாணத்தை முடிப்பது.. ரிஷப்ஷன் எங்கே வைத்துக்கொவது..’ என்பது மாதிரியாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் அசோக்கின் செல்போன் உள்ளறைக்குள் இருந்து அலறியது. செல்வியே உள்ளே சென்று அதை எடுத்து வந்து அசோக்கிடம் நீட்டினாள். அசோக் செல்போனை வாங்கி பார்த்தான். செண்பகம் கால் செய்திருந்தாள். ‘இவள் எதற்கு இந்த நேரத்தில்..??’ என்று சற்றே குழப்பமான அசோக், கால் பிக்கப் செய்து பேசினான்.

“சொல்லு செம்பு..!!”

“மா..மாமா.. எங்க இருக்கீங்க..??” செண்பகத்தின் குரலில் ஒரு பதட்டம்.

“நான் இன்னும் கெளம்பல செம்பு.. வீட்லதான் இருக்கேன்.. சொல்லு..!!”

“இங்க ஆபீஸ்ல கொஞ்சம் பிரச்னை மாமா..!!” செண்பகம் சொன்ன விதத்திலேயே, இப்போது அசோக்கையும் மெலிதான ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது

“பிரச்னையா..?? என்ன பிரச்னை..??”

“யு.ஏ.டி போஸ்ட்போன் ஆயிடுச்சு.. ஏதோ பெரிய பிரச்னை போல.. ப்ரியாக்காதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றாங்க.. பாலா ரூமுக்குள்ள அவருக்கும், அக்காவுக்கும் பயங்கர ஆர்க்யுமன்ட் நடந்துட்டு இருக்கு.. ப்ராப்ளம் ரொம்ப சீரியஸ் போல இருக்கு மாமா.. எனக்கு முழுசா தெரியல..!! நீங்க உடனே கெளம்பி வர்றீங்களா.. ப்ளீஸ்..!!”

அசோக்கிற்கு கொஞ்ச நேரம் எதுவுமே புரியவில்லை. ‘யு.ஏ.டி எதற்காக போஸ்ட்போன் செய்தார்கள்..?? நேற்று இரவு வரை எந்தப்பிரச்சனையும் இல்லையே..?? திடீரென என்ன ஆயிற்று..?? அதுவும் ப்ரியாதான் காரணம் என்றால்..??’ யோசிக்க யோசிக்க அவனுக்கு குழப்பமே மிஞ்சியது. ப்ரியாவின் நம்பருக்கு இரண்டு மூன்று முறை கால் செய்து பார்த்தான். ரிங் சென்றது, கால் பிக்கப் செய்யப்படவில்லை.

இப்போது அசோக்கை ஒருவித அவசரம் தொற்றிக் கொண்டது. படக்கென எழுந்தான். தன் அறைக்குள் நுழைந்தவன் பைக் சாவியுடன் வெளியே வந்தான். ‘என்னடா.. என்னாச்சு..?’ கேட்டவாறே எதிர்ப்பட்ட செல்விக்கு பதிலே சொல்லாமல், பரபரப்பாய் வீட்டை விட்டு வெளியேறினான்.

பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தவன், ஆபீஸை சென்றடைய அரைமணி நேரம் ஆனது. லிஃப்ட் ஏறி அவர்களுடைய தளத்திற்கு சென்றான். டீமில் இருப்பவர்கள் ஆங்காங்கே நின்று, ஏதோ கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்ததுமே செண்பகம் பதற்றம் அப்பிய முகத்துடன் எதிரே வந்தாள்.

“என்ன பிரச்னை செம்பு.. ஏதாவது தெரிஞ்சுச்சா..??”

“நேத்து யு.ஏ.டி ஸ்டார்ட் பண்றதுக்காக.. பில்ட் எடுத்து டெப்லாய் பண்ணிருக்காங்க.. ஆனா.. ப்ரொஸீட் பண்ண முடியாம மாதிரி ஷோ ஸ்டாப்பர்..!! வேற வழி இல்லாம.. யு.ஏ.டி போஸ்ட்போன் பண்ணிருக்காங்க.. க்ளையன்ட் ரொம்ப கடுப்பாயிட்டாங்க போல.. நம்ம கம்பனியை கன்னாபின்னான்னு திட்டிருக்காங்க..!! நேத்து நைட்டு ப்ரியாக்கா லாஸ்ட் மினிட்ல ஒரு கோட் செக்கின் பண்ணிருக்காங்க மாமா.. அதனாலதான் எல்லா ப்ராப்ளமும்..!!”

“அதுல என்ன ப்ராப்ளம்..??”

“அப்ளிகேஷனே வொர்க் ஆகல மாமா.. எந்த லிங்க் க்ளிக் பண்ணினாலும்.. ‘ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்.. ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..’ னு கொட்டை எழுத்துல வந்திருக்கு..!! ஏதோ.. கேர்லஸா செக்கின் பண்ணிட்டாங்கபோல.. அக்கா பாவம் மாமா.. காலைல இருந்து.. ”

செண்பகம் சொல்லிக்கொண்டிருக்க, அசோக்கிற்கு இப்போது சுருக்கென்று இருந்தது. அதிர்ச்சியில் அவனது விழிகள் அகலமாய் விரிந்து கொண்டன. ப்ரியாவை சீண்டுவதற்காக நேற்று இரவு அவளுடைய லேப்டாப்பில் அவன் செய்த வேலைதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பது உடனே அவனுக்கு புரிந்து போனது. அவள் மட்டும் பார்ப்பாள் என்று எண்ணி, அப்ளிகேஷனை செயலிழக்க செய்து, ‘ப்ரியா இஸ் எ ஸ்டுபிட்..’ என்று திரும்ப திரும்ப வருமாறு.. ப்ரோக்ராம் சில்மிஷம் செய்து வைத்திருந்தான். அதை கவனிக்காமல் அவள் செக்கின் செய்து விட்டாள் போலிருக்கிறது. அதனால்தான் எல்லா பிரச்சினையும்..!!

தான் விளையாட்டாய் செய்த காரியம் எவ்வளவு பெரிய விபரீதத்தை உண்டு பண்ணியிருக்கிறது என்பதை உணர்ந்து, அசோக் அப்படியே தளர்ந்து போனான். உள்ளுக்குள் பொடிப்பொடியாக நொறுங்கினான். தான் செய்த தவறுக்காக இப்போது ப்ரியா மாட்டிக்கொண்டாள் என்பதை எண்ணும்போது, அவனுடைய இதயத்தில் ஒரு இனம்புரியாத வலி. ‘ச்சே..’ என்று நொந்துபோனவனாய் தலையை பிடித்துக் கொண்டான். தடுமாற்றமான குரலில் செண்பகத்திடம் கேட்டான்.

“ப்..ப்ரியா இப்போ எங்க செம்பு..??”

“மீட்டிங் முடிஞ்சு அக்கா இப்போதான் அவங்க ரூமுக்கு போனாங்க.. ரொம்ப அப்சட்டா இருக்காங்க மாமா..!!”

செண்பகத்தை ஒரு கையால் விலக்கிவிட்டு, அசோக் ப்ரியாவின் அறைக்கு விரைந்தான். ‘ச்சே.. என்ன காரியம் செய்துவிட்டேன்..??’ என்று தன்னைத்தானே மனதுக்குள் திட்டியவாறு, அறைக்கதவை தள்ளி உள்ளே நுழைந்தான். ப்ரியா அழுது கொண்டு இருந்திருப்பாள் போலிருக்கிறது. யாரோ அறைக்குள் நுழைகிறார்கள் என்று உணர்ந்ததும், அவசரமாய் தன் விழிகளை துடைத்துக் கொண்டாள். அப்புறம் அது அசோக் என்று தெரிந்ததும்,

“அசோக்..!!” என்று ததழத்த குரலில் கத்தினாள். உடைந்து போய் மீண்டும் அழுதவாறே, அவளுடைய இருக்கையை விட்டு எழுந்து, இவனை நோக்கி ஓடி வந்தாள்.

“எ..என்னாச்சு ப்ரியா..??” என்ன பேசுவதென்று புரியாமல் அவ்வாறு கேட்டான் அசோக்.

“என்னாச்சுன்னே எனக்கு ஒன்னும் புரியல அசோக்.. எல்லாம் போச்சு.. நான் இத்தனை நாளா சம்பாத்திச்ச பேர், மதிப்பு எல்லாம் போச்சு..!! யாரோ என் மெஷின் அக்ஸஸ் பண்ணி தப்பான கோட் சேர்த்திருக்காங்க.. அதை கவனிக்காம நானும் செக்கின் பண்ணிட்டேன்..!! நைட்டு வீட்டுக்கு போய் தூங்குறதுக்கே ஒரு மணி ஆயிடுச்சுடா.. காலைல மூணு மணிக்கு எனக்கு கால் வந்தது.. அப்போலருந்து நான் தூங்கவே இல்ல..!! ஒரே டென்ஷன் அசோக்..!! இவங்கலாம் நான்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றாங்க.. நான் சொல்றதை யாருமே நம்ப மாட்டேன்றாங்கடா..!! யாரு இந்த வேலையை செஞ்சான்னே எனக்கு ஒன்னும் புரியல அசோக்..!!” ப்ரியா படபடவென பரிதாபமாக சொல்ல, அசோக்கால் அதற்கு பிறகும் பொறுக்க முடியவில்லை.

“நா..நான்தான் ப்ரியா.. நான்தான் செஞ்சேன்..!!” என்று உண்மையை உடனே உடைத்துவிட்டான்.

அவன் சொன்னதுமே ப்ரியாவின் முகம் பட்டென மாறிப்போனது. அவளுடைய அழுகை சட்டென நின்று போனது. அப்படியே அதிர்ந்து போனவளாய் அசோக்கின் முகத்தையே திகைப்பாய் பார்த்தாள். இன்னுமே அவன் சொன்ன வார்த்தைகளை நம்ப முடியாத மாதிரியான ஒரு பார்வை. அப்புறம் அசோக்..

“நா..நான்தான் ப்ரியா..!!”

என மீண்டும் தாழ்ந்த குரலில் சொல்ல, ப்ரியா இப்போது தளர்ந்து போனாள். பொத்தென்று அவளுடய சேரில் அமர்ந்தாள். அசோக்கை ஏறிட்டு பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.

8

“ஏன் அசோக்..??” என்று ஏக்கமாக கேட்டாள். அசோக் இப்போது அப்படியே உருகிப் போனான். பட்டென அவளை நெருங்கி அவளுடைய கையை பற்றிக்கொண்டான்.

“ஸாரி ப்ரியா.. நா..நான்.. நான் வேணுன்னு பண்ணல.. சும்மா வெளையாட்டுக்கு பண்ணேன்.. உன்னை சீண்டுறதுக்காக..!! நீ மட்டும் பார்ப்பேன்னு நெனச்சேன்.. அது இவ்வளவு பெரிய பிரச்னை ஆகும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல..!!”

அசோக் உண்மையான வருத்தத்துடன் சொன்னான். ப்ரியா எதுவும் பேசவில்லை. சில வினாடிகள் எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். என்ன செய்வதென்றே எதுவும் புரியாதவளாய், உணர்ச்சியற்ற ஜடம் போல அமர்ந்திருந்தாள். ஒரு அரை நிமிடம் இருக்கும்..!! அப்புறம் ஏதோ முடிக்கு வந்தவளாய் நிமிர்ந்தாள். அசோக் அவளையே இரக்கமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் தனது விழிகளில் வழிந்த நீரை அவசரமாய் துடைத்துக் கொண்டாள்.

“ஸாரி ப்ரியா..!!” என்றான் அசோக் மீண்டும்.

“பரவால அசோக்.. விடு..!!” இறுக்கமாக சொன்ன ப்ரியா, தனது லேப்டாப்பை தன் பக்கமாக இழுத்தாள். படபடவென்று ஏதோ டைப் அடிக்க ஆரம்பித்தாள்.

“பா..பாலா என்ன சொன்னாரு..??” அசோக் தயங்கி தயங்கி கேட்டான்.

Comments

Scroll To Top