மலரே என்னிடம் மயங்காதே – 10

(Tamil Hot Sex Stories - Malarae Ennidam Mayangathae 10)

Raja 2014-02-19 Comments

Tamil Hot Sex Stories – காலையில் மிதமான சூட்டில் காபியோ டீயோ கலந்து கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கும்.. மலரின் கனிவான அணுகுமுறைகள்..!! அதே மிதமான சூட்டில் எனக்கு வெந்நீர் தயார் செய்வதிலாகட்டும்.. குளித்து முடித்து வெளிவரும்போது, சுருக்கமில்லாமல் இஸ்திரி செய்யப்பட்ட உடைகள் என் கட்டிலில் காத்திருப்பதாகட்டும்.. எனக்கு பிடித்தமான உணவினை சுவையாக சமைத்து வைத்திருப்பதிலாகட்டும்.. அந்த உணவை உடனிருந்து பரிமாறி, நான் உண்ணும் அழகை ஓரக்கண்ணால் பார்ப்பதிலாகட்டும்.. பாலீஷ் போட்டுக்கொண்டு பளபளவென மின்னும் கருப்பு காலணியிலாகட்டும்..!! இரவு எனக்கு சுத்தமான படுக்கை விரிப்பு விரித்து வைத்திருப்பது வரை நீளும் அந்த அணுகுமுறைகள்..!!

1

இவை எல்லாமே கடந்த ஒருவருடமாக, மலர் செய்கிற செயல்கள்தான்..!! ஆனால்.. இப்போது எனக்கு எல்லாமே புதிதாக தோன்றின..!! கயலின் நினைவுகளிலேயே மூழ்கியிருந்தவன், இப்போதுதான் கண்திறந்து இதெல்லாம் கவனிக்கிறேன் என்று தோன்றியது. அவள் என்னை காதலிக்கிறாள் என்று வாய்திறந்து சொன்ன பிறகுதான், அவளுடய செய்கைகளில் இருந்த காதலையும், அக்கறையையும் உணர முடிகிறது என்னால்..!! எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதை மலர் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். சில நேரங்களில் நான் வாய் திறந்து எதுவும் சொல்லாமலே, என் மனமறிந்து அவள் நடந்து கொள்வதையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

என்னை மட்டும் அல்ல.. அபியையும் மலர் எவ்வளவு அன்பும், அக்கறையுமாய் கவனித்துக் கொள்கிறாள் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அவனுடைய பசியறிந்து பால் புகட்டுவது.. அவனது அறிவை வளர்ப்பது மாதிரியான விளையாட்டுக்களை அவனுடன் ஆடுவது.. அவன் அழுதால் துடித்துப் போவது.. ஊஞ்சலில் வைத்து தாலாட்டி அவனை உறங்க வைப்பது..!! கயல் இல்லாத குறை அபிக்கு தெரியப் போவதில்லை என்று உறுதியாக என்னை நம்பவைத்த அணுகுமுறைகள்..!!

அந்த இரண்டு மூன்று வாரங்களில் மலரை பற்றி நான் அதிகமாக யோசிக்க ஆரம்பித்திருந்தேன். ஆபீசில் கூட அவ்வப்போது மலர் மனதுக்குள் வந்து போனாள். ஒரு சில நேரங்களில், மலர் தன் மனதை மாற்றிக் கொள்வதற்கு பதிலாய்.. நான் என் மனதை மாற்றிக் கொண்டு விடுவேனோ.. என்று கூட எனக்கு சிந்தனை ஓடும்..!! அப்புறம் அந்த மாதிரி நினைத்ததற்காக என்னை நானே கடிந்து கொள்வேன்..!! ஒரு நாள் உறக்கத்தில்.. கயலுக்கு பதிலாய் மலர் என் கனவில் வந்து போக.. சத்தியமாய் நான் குழம்பிப் போனேன்..!! காலையில் எழுந்து நெடுநேரம் தேமே என்று படுக்கையில் அமர்ந்திருந்தேன்..!! அந்த மாதிரி ஒரு குழப்பமான ஒரு மனநிலையில் நான் இருந்தபோதுதான் அந்த சம்பவம் நடந்தது..!!

அன்று எனக்கு விடுமுறை. என்னுடைய மேலதிகாரி அன்று என்னை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். அவருடைய திருமண நாளை ஒட்டி, எனக்கு அளிப்பதாக அவர் சொல்லியிருந்த விருந்து..!! அவர் பெயர் சந்திரசேகரன். அடையாறில் வசிக்கிறார். ஒருமணிக்கெல்லாம் அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய வீட்டில்தான் விருந்து என்று நினைத்திருந்த எனக்கு சிறிது ஏமாற்றம். ஹோட்டல் சென்று சாப்பிடலாம் என்றார்கள். அவர், அவருடைய மனைவி, மகள், மகன் அப்புறம் நான் என ஐந்து பேரும், அடையாறில் இருக்கும் ஒரு உயர்தர அசைவ உணவகம் சென்று மதிய உணவருந்தினோம்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அருகில் இருந்த பெண்கள் அணிகலன்கள் கடையை பார்த்து, அவரது மனைவிக்கும் மகளுக்கும் ஆசை பிறந்துவிட்டது. எல்லோரும் உள்ளே செல்ல, நானும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் செல்ல வேண்டியதாயிற்று. காதில், கழுத்தில், கையில், விரலில், மூக்கில் என.. பெண்கள் அணிந்து கொள்ளும் சமாச்சாரங்கள் கடை முழுதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. காஸ்ட்லியான அணிகலன்கள் என்று சொல்ல முடியாது. அவைகளின் டிசைன்தான் ஸ்பெஷல் என்று பெண்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள். அவர்கள் செலக்ட் செய்ய, ஆண்கள் மூவரும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

எனக்கு அப்போதுதான் திடீரென்று மலரின் ஞாபகம் வந்தது. அவளுக்கு ஏதாவது வாங்கி செல்லலாமா என்று யோசித்தேன். நிறைய நேரம் எல்லாம் யோசிக்கவில்லை. வாங்கி செல்லலாம் என உடனடியாகவே ஒரு முடிவுக்கு வந்தேன். சந்திரசேகரின் மகளிடம் மலரைப்பற்றி சொல்லி, காதில் அணிந்து கொள்ளும் ஐட்டம் ஏதாவது செலக்ட் செய்ய சொன்னேன். அவளும் அழகாக, வித்தியாசமான டிசைனில் இருந்த ஒரு ஜிமிக்கியை செலக்ட் செய்து கொடுத்தாள். அதற்கு நான் தனியாக பணம் செலுத்தி, கிஃப்ட் ராப்பரில் சுற்றிக் கொண்டேன். மலருக்கு நான் இதுவரை இந்த மாதிரி எந்த பரிசும் வாங்கி தந்ததில்லை. இதுதான் முதல்முறை..!! மலருக்கு இந்த ஜிமிக்கி நிச்சயம் சந்தோஷத்தை கொடுக்கும் என்று தோன்றியது.

2

மறுபடியும் சந்திரசேகர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் நான் வீடு திரும்புகையில் ஐந்து மணியை நெருங்கியிருந்தது. மலர்தான் வந்து கதவு திறந்து விட்டாள். அபி சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். பன்னீர் வீட்டில் இல்லை என்று தோன்றியது. வீட்டுக்குள் நுழைந்தேன். விருந்து எப்படி இருந்தது என்று மலர் விசாரித்து தெரிந்து கொண்டாள்.

“நல்லா சாப்டீங்களாத்தான்..?”

“ம்ம்.. செம தீனி..!! எனக்கு இன்னும் நாலு நாளைக்கு பசிக்காதுன்னு நெனைக்கிறேன்..!!”

“ஹ்ஹஹாஹஹா.. அப்டி என்ன சாப்டீங்க..?”

“சிக்கன்.. மட்டன்.. ஃபிஷ்.. ஃப்ரான்ஸ்.. ஒன்னை விட்டு வைக்கலை..!!”

“ஹ்ஹஹாஹஹா.. அப்போ நைட்டு எனக்கு சமைக்கிற வேலை கொஞ்சம் மிச்சம்னு சொல்லுங்க..!!”

“ஆமாம்..!! ம்ம்ம்ம்… அப்புறம்…” நான் இழுக்க, அவள்

“என்னத்தான்..?” என்று நெற்றியை சுருக்கினாள்.

“உ..உனக்கு..”

“எனக்கு..?”

“உனக்கு நான் இன்னைக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்..!!” நான் சொல்ல அவள் இப்போது ஆச்சரியப்பட்டாள்.

“ஓ.. அப்படியா..? என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்..? நானும் உங்களுக்காக இன்னைக்கு ஒன்னு பண்ணினேன்..” அப்படி அவள் சொல்ல, இப்போது நான் ஆச்சரியமடைந்தேன்.

“எனக்காகவா.. என்ன பண்ணின..?” என்றேன் இதழில் புன்னகையுடன்.

“ம்ம்ம்.. இதுதான்..!!”

பெருமையாகவும் சந்தோஷமாகவும் சொன்ன மலர், சோபாவில் கிடந்த அந்த ஸ்வெட்டரை எடுத்து விரித்து பிடித்து எனக்கு காட்டினாள். அது.. அந்த ஸ்வெட்டர்.. கயல் எனக்கு ஹனிமூனின்போது வாங்கித்தந்த ஸ்வெட்டர்..!! அதன் இடது புறத்தில்.. சாம்பல் நிறத்தில் மீன் எம்ப்ராய்டரி இருந்த இடத்தில்.. இப்போது சிவப்பு நிறத்தில் புதிதாய் ஒரு மலர் பூத்திருந்தது..!!

அதை பார்த்த மாத்திரத்திலேயே, எனக்கு பட்டென இதயம் வெடித்த மாதிரி இருந்தது..!! உச்சபட்ச அதிர்ச்சியும் திகைப்புமாய் நான் அந்த ஸ்வெட்டரையே பார்த்துக் கொண்டிருக்க, என் மனநிலையை சற்றும் உணராதவளாய்.. மலர் தொடர்ந்து உற்சாகமாய் படபடவென பேசிக்கொண்டிருந்தாள்.

“இப்போலாம் நைட்டு ரொம்ப பனியா இருக்குலத்தான்..? இந்த ஸ்வெட்டர்ல எம்ப்ராய்டரி பிரிஞ்சு.. அசிங்கமா.. அதான இதை போடாம பீரோல வச்சிருந்தீங்க..? இன்னைக்கு பீரோ கிளீன் பண்றப்போ பாத்தேன்.. சரி வேற எம்ப்ராய்டரி போட்டா.. நீங்க யூஸ் பண்ணுவீங்கன்னு தோணுச்சு.. அதான்.. பழைய எம்ப்ராய்டரிலாம் நல்லா நூல் பிரிச்சு விட்டு.. இந்த பூ போட்டு விட்டேன்..!! அந்த பழைய எம்ப்ராய்டரியை விட இது நல்லா மேட்சா.. அழகா இருக்குலத்தான்..??”

அவ்வளவுதான்..!! எனக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆத்திரம் வந்ததோ..? என் இதயத்தில் கயல் இருந்த இடத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் மலர் வலுக்கட்டாயமாக குடியேற முயலுகிறாள் என்பது மாதிரியான ஒரு ஆத்திரம்..!! காட்டுத்தனமாய் கத்தினேன்.

“அறிவிருக்கா உனக்கு..?? என்ன வேலை பண்ணி வச்சிருக்க..??”

“எ..என்னத்தான்.. எ..என்னாச்சு..?” எதுவும் புரியாமல் மலர் பதறினாள்.

“இது கயல் எனக்கு வாங்கித்தந்த ஸ்வெட்டர்னு உனக்கு தெரியாது..??”

“தெ..தெரியும்..”

“அப்புறம் எதுக்கு இந்த வேலைலாம் பண்ணின..?”

3

“இ..இல்லைத்தான்.. இது.. எ..எம்ப்ராய்டரி.. பிரிஞ்சு…” மலரின் உடல் வெடவெடக்க, உதடுகள் படபடத்தன.

“வாயை மூடு..!! ஏன் தேவையில்லாத வேலைலாம் பண்ணுற..? இதுலாம் பண்ணுன்னு நான் உன்கிட்ட சொன்னனா..? இனிமே இந்த மாதிரி ஏதாவது பண்ணின.. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது..!!”

நான் கண்களை உருட்டி ரவுத்திரமாக கத்த, மலரின் கண்கள் இப்போது பொலபொலவென கண்ணீரை வடிக்க ஆரம்பித்தன. காயம்பட்ட பறவை போல பரிதாமாக என்னை பார்த்தாள்.

“ஸா..ஸாரித்தான்.. தெ..தெரியாம பண்ணிட்டேன்..!!”

“பண்றதுலாம் பண்ணிட்டு ஸாரி கேட்டுட்டா.. எல்லாம் சரியா போயிடுமா..?? கயல் சம்பந்தப்பட்ட பொருள் எதிலயாவது இனிமே நீ கையை வச்ச.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!! கொண்டா அதை..!!”

ஆத்திரமும், வெறுப்புமாய் வார்த்தைகளை கக்கிய நான், அவள் கையிலிருந்த ஸ்வெட்டரை வெடுக்கென பறித்தேன். இனி இந்த ஸ்வெட்டர் எனக்கு தேவையில்லை. கயலின் நினைவுகள் பொசுக்கப்பட்ட இந்த ஸ்வெட்டர் இனி எனக்கு தேவையே இல்லை..!! பால்கனிக்கு அவசரமும், ஆத்திரமுமாய் நடந்து சென்றேன். பாக்கெட்டில் கைவிட்டு அந்த ஜிமிக்கி பாக்ஸை எடுத்தேன். அதை ஸ்வெட்டருக்குள் வைத்து பந்தாக சுருட்டி.. வெளியே தெரிந்த குப்பை மேட்டை நோக்கி.. தூரமாக தூக்கி எறிந்தேன்..!!

Comments

Scroll To Top